ஊட்டி: கேரளா இளைஞர், 650 கி.மீ., ' ஆட்டிசம்' குறித்து சைக்கிள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆண்டு தோறும் ஏப்., 2ம் தேதி ' உலக ஆட்டிசம்' விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அருண்ஜித், இவர், 'ஆட்டிசம்' குறைபாடுள்ள குழந்தைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதை மையப்படுத்தி ' மன இறுக்கம் ஒரு இயலாமை அல்ல' ; 'இது வேறு திறன்' என, பொதுமக்களுக்கு சைக்கிள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
ஏப்., 8ம் தேதி கொச்சினில் துவங்கிய சைக்கிள் விழிப்புணர்வு, திருச்சூர், கோழிக்கோடு, நிலம்பூர், கூடலூர், ஊட்டி, கோவை, பாலக்காடு, திருச்சூர், கொச்சினில் நாளை இரவு நிறைவு பெறுகிறது. சைக்கிளின் முன்பகுதியில், ' மன இறுக்கம் ஒரு இயலாமை அல்ல' ; 'இது வேறு திறன்' என்று எழுதிய வாசகத்துடன் சைக்கிள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அருண்ஜித் கூறுகையில்," ' ஆட்டிசம்' என்பது குழந்தையின் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடு தான், பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்ற முடியும். மன இறுக்கம் ஒரு இயலாமை அல்ல' ; 'இது வேறு திறன்' என, 650 கி.மீ., தூரம் பொதுமக்களிடம் சைக்கிள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்." என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE