பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.11) 6 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,11) 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.11) 6 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,11) 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 261 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-192) மூலமாக, இன்று மட்டும் 88,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரத்து 126 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,992 பேர் ஆண்கள், 2,626 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,63,478 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,69,920 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 2,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,908 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஏப்-202123:45:08 IST Report Abuse
ஆப்பு 6618 பேருக்கு பாதிப்புன்னு சொல்றது எத்தனை பேரை கொரோனா பரிசோதனை செஞ்சாங்க என்பதை பொறுத்திருக்கும். நிறைய பேருக்கு பரிசோதனை செய்தால் நிறைய பேருக்கு வரும்.
Rate this:
Cancel
11-ஏப்-202122:07:52 IST Report Abuse
ஆப்பு விமானம்... விமானம்...வீணாப்போன விமானம்....பரப்புரைக்கு வந்த விமானம்...பாழாப் போன விமானம்...அடிக்கல் நாட்ட வருவாங்க...கொரோனா பரப்பிட்டு போவாங்க...பறந்து பறந்து வருவாங்க...பாங்காய் பரப்பிட்டு போவாங்க...அவுருக்கு கம்பளம் விரிப்பாங்க..மக்களை முடக்கி அடிப்பாங்க...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஏப்-202120:42:35 IST Report Abuse
A.George Alphonse விளையாட்டு போட்டியில் ஸ்கொர் போர்டில் எண்கள் வேகமாக மாறு வதுபோல் தினமும் காரோண தாக்கம் நமது மாநிலத்தில் அதிகரிப்பது எல்லோருக்கும் பயங்கர பீதியை கொடுக்கிறது.ஆண்டவா எங்களை காப்பாற்று. Rr
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X