படைகள் 'வாபஸ்': சீனா புது விளக்கம்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பீஜிங்:'எல்லையில் தற்போதுள்ள ஆரோக்கியமான சூழ்நிலைக்கு இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டும். அதன் தொடர்ச்சியாக படைகளை விலக்கி கொள்வது குறித்து பேசலாம்' என, சீனா கூறியுள்ளது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து, இந்தியா - சீனா இடையே, 10 சுற்று பேச்சுகள் நடந்துள்ளன. அதன்படி, ஒரு சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. மற்ற இடங்களில் இருந்தும்

பீஜிங்:'எல்லையில் தற்போதுள்ள ஆரோக்கியமான சூழ்நிலைக்கு இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டும். அதன் தொடர்ச்சியாக படைகளை விலக்கி கொள்வது குறித்து பேசலாம்' என, சீனா கூறியுள்ளது.



latest tamil news



எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து, இந்தியா - சீனா இடையே, 10 சுற்று பேச்சுகள் நடந்துள்ளன. அதன்படி, ஒரு சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. மற்ற இடங்களில் இருந்தும் படைகளை முழுமையாக விலக்கி கொள்வது குறித்து தொடர்ந்து பேசப்படுகிறது.
இந்தியா - சீனா ராணுவத் தளபதிகள் இடையே, சமீபத்தில், 11வது சுற்று பேச்சு நடந்தது. 'இந்த பேச்சில், எல்லையில் இருந்து படைகள் விலக்கி கொள்வது குறித்து ஏதும் விவாதிக்கப்பட வில்லை' என, இந்தியா கூறியுள்ளது.


இது குறித்து, சீன ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:எல்லையில், தற்போதுள்ள சூழ்நிலை குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டும். ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களின்படி, எல்லையில் அமைதி தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றம் குறைந்து, ஆரோக்கியமான சூழ்நிலை உள்ளது.


latest tamil news



முந்தைய பேச்சுகளின்படியும், ஒப்பந்தங்களின்படியும், எல்லையில் பிரச்னைகள் இல்லாமல், அமைதி நிலவ, இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். படைகள் முழுமையாக விலக்கி கொள்வது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுகளில் விவாதிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
12-ஏப்-202107:50:56 IST Report Abuse
Darmavan உண்மை என்ன என்று தெரியவில்லை.சீனாவின் பேச்சுக்கு உள் அர்த்தம் என்ன.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஏப்-202107:29:29 IST Report Abuse
Loganathan Kuttuva சீனா நாட்டு பொருட்கள் வாங்குவதை நம் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஏப்-202106:04:41 IST Report Abuse
M  Ramachandran அது என்ன இந்தியா இப்போது மகிழ்ச்சி சீனனுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதை தெரிவிக்கிரறானா? அப்போ போட்டு பார்த்திட வேண்டியது தானே? இரண்டில் ஒன்று அப்போது சீனன் மகிழ்ச்சி வெளிபட்டிருக்குமே/ அவன் இந்தியாவிலு சில புல்லுருவி கலை நம்பி நம்மை அடிக்க வந்தான். ஆநாள் இப்போ உள்ள அரசு குறட்டை விட்டு தூங்க்கும் அரசு அல்ல என்பதை தெளிவு படுத்தியதும் வாலை சுருட்டிக்கொண்டான். மீசையில் மண் ஒட்டாதது போல் பேசுகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X