இரண்டாவது அலையே இறுதி அலையாகட்டும்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஊரடங்கு என்ற வார்த்தையே மக்களுக்கு கசப்பாக இருக்கிறது காரணம் கடந்த வருடங்களில் அனுபவித்த கொடுமைகளும் இழப்புகளும் அப்படிப்பட்டது.தடுப்பூசி வந்துவிட்டது,கொரோனா பரவல் குறைந்துவிட்டது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் குறைந்துவிட்டது இதனால் இறப்பு எண்ணிக்கையும் அதிகம் இல்லை என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென

ஊரடங்கு என்ற வார்த்தையே மக்களுக்கு கசப்பாக இருக்கிறது காரணம் கடந்த வருடங்களில் அனுபவித்த கொடுமைகளும் இழப்புகளும் அப்படிப்பட்டது.


latest tamil news


தடுப்பூசி வந்துவிட்டது,கொரோனா பரவல் குறைந்துவிட்டது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் குறைந்துவிட்டது இதனால் இறப்பு எண்ணிக்கையும் அதிகம் இல்லை என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா இரண்டாவது அலை பரவலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



latest tamil news


ஆனால் நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது பற்றிய கவலையின்றி கொரோனா கடுமையான வேகத்தில் பரவிக்கொண்டு இருக்கிறது,இளைஞர்களுக்கு அதிகம் பரவுவதும்,குடும்பத்தில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் வருவதும்,இறப்பு விகிதம் அதிகரிப்பதும்தான் கவலைக்கு முக்கிய காரணம்.


latest tamil news


முககவசம்,சமூக இடைவெளி,கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை என்றாலும் நமக்கு அதைத்தவிர வேறு வழியில்லை.


latest tamil news


இருநுாறு ரூபாய் கொடுத்து அரசியல் கூட்டத்திற்கு கூட்டிச் சென்றார்கள் இப்போது மாஸ்க் அணியவில்லை என்று அதே இருநுாறு ரூபாயை அபாரதம் என்ற பெயரில் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று வாட்ஸ்அப்பில் வரும் மீம்ஸ்களுக்கு இப்போதெல்லாம் சிரிப்பு வருவதில்லை காரணம் அதையும் மீறி நமக்குள் இருக்கும் மனஅழுத்தம்.


latest tamil news


இதில் கடைசி வரை கானொளி காட்சி மூலமாக வரமாட்டோம் நேரில் பார்த்துதான் பேசுவோம் என கட்சி பேதமில்லாமல் கூட்டத்தை கூட்டிய அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு கோபம் எழுகிறது ஆனால் கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லையே என்பர்.
இப்போது மகராஷ்ட்ரா மாநிலம்தான் ஊரடங்கு என்ற முதல் சங்கை ஊதியுள்ளது.முழுமையாக இல்லாமல் வாரக்கடைசி நாட்களில் மட்டும் என்று சொல்லியிருக்கின்றனர் ஆனால் அதை இந்த வாரத்திற்குள் முழு ஊரடங்காக மாற்றிவிடுவர் ஏனேனில் வாரக்கடைசி நாட்களுக்கு முந்திய நாட்களில் மார்க்கெட்டுகளில் குவியும் கூட்டம் அப்படி.
சீனாவிற்கு வந்த பிரச்னை இந்தியா வர ரொம்ப நாட்களாகவில்லை அதே போல மகராஷ்ட்ராவிற்கு வந்த பிரச்னை தமிழகத்திற்கு வருவதற்கு ரொம்பநாளாகாது.
தகுதியுள்ளவர்கள் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்,தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுங்கள்,இடைவெளியுடன் சினிமா பார்த்துதான் ஆகவேண்டுமா என யோசியுங்கள்,ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறுங்கள், இந்த கொரோனாவின் இரண்டாவது அலையே இறுதி அலையாகட்டும்.
-எல்.முருகராஜ்.

-

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
12-ஏப்-202103:45:08 IST Report Abuse
NicoleThomson உங்களின் சமூக அக்கறை புரிகிறது சார் மற்றையோரை போல மானாட துயிலாட என்று இல்லாமல் உண்மையை போட்டுடைக்கும் உரை கல்லில் வேலை பார்ப்பதால் நிஜத்தை சொல்லுறீங்களோ?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
11-ஏப்-202120:24:25 IST Report Abuse
Visu Iyer மாஸ்க் போட சொல்றாங்களே.. அதை எப்படி போடணும்னு சொல்றாங்களா... ஒரே மாஸ்க்கை எத்தனை நாட்கள் போடணும்.. ஒருவருடைய மாஸ்க்கை இன்னொருவர் போட்டுக் கொள்ளலாமா... என்பது முதல்.. பல கேள்வி இருக்குதுங்க... (போலீஸ் க்கு பயந்து அடுத்தவரின் மாஸ்க் போட்டுக் கொண்டு போகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்..)
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
11-ஏப்-202120:22:50 IST Report Abuse
Visu Iyer மாஸ்க் போட சொல்றீங்க.. சொல்றாங்க.. சரி.. மூக்கையும் வாயையும் தானே மூடனும்.. அதை மூடினாலும் மாஸ்க் தானே போட சொல்றாங்க.. அப்படின்னா... இது என்னதுங்க.. என்று கேட்க தோன்றவில்லையா..
Rate this:
karutthu - nainital,இந்தியா
13-ஏப்-202108:55:52 IST Report Abuse
karutthuவாயையும் மூக்கையும் மூடினால் கதை கந்தல் தானே அப்புறம் மாஸ்க் போடத்தேவையில்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X