மே-2 வெளியேற தயாரா? மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி!

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மே 2 அன்று நீங்க வெளியேற தயாரா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில்

கோல்கட்டா: மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மே 2 அன்று நீங்க வெளியேற தயாரா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.



latest tamil news



மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் 4பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எஃப்) தான் இந்த படுகொலையை நிகழ்த்தியதாக மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சாட்டினார். இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மம்தா அதிரடியாக கூறினார்.


அமித்ஷா பதிலடி


இந்நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கம் பசிர்ஹத் தக்ஷினில் பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது:- அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீதி மீண்டும் மீண்டும் கூறுகிறார். தீதி அவர்களே மக்கள் என்னை ராஜினாமா செய்யச் சொல்லும்போது, நான் ராஜினாமா செய்வேன். ஆனால் மே 2 அன்று நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.


latest tamil news




சிறப்பான பிரியா விடை



நான் உங்கள் முன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். தீதி 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவருக்கு ஒரு சிறிய பிரியாவிடை வழங்குவது நன்றாக இருக்குமா? எனவே நீங்கள் பாஜகவுக்கு 200 இடங்களைக் கொடுத்து அவருக்கு சிறப்பான பிரியா விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வடநாட்டு அடிமாடு நாட்டில் உள் கலவரங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஜன்டா.. தமிழகத்தில் அது நடக்காது.. சங்கிகள் ஓய்ந்து போவார்கள்.. ஆன்ட்ராய்டு சங்கிகள்..
Rate this:
Cancel
Vellai Durai Ram - chennai,இந்தியா
12-ஏப்-202110:29:51 IST Report Abuse
Vellai Durai Ram நம்ம சின்ன பைய்யன் சிதம்பரம் ஐயா இருந்தப்ப விளக்கிடுச்சோ இல்ல சுஷில்குமார் ஷிண்டே இருந்தப்ப விளங்கிடுச்சாஇல்ல மணிக்கு ஒரு டிரஸ் மாத்தும் க்ரிஷ்ணவள விளங்கிடுச்சா எப்ப விளங்கிடுச்சு
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
12-ஏப்-202108:51:13 IST Report Abuse
S Bala லட்ச தீவுகள் ஒவ்வொன்றிலும் மமதா, ஸ்டாப்களின், போன்றவர்களை ஆதரவாளர்களுடன் கொண்டு விட்டுவிட்டு வந்துவிடலாம். அவர்களும் அந்த தீவுகளை தங்கள் ஊழல் பணத்தை கொண்டு முன்னேற்றுவார்கள், இந்தியாவும் முன்னேறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X