பொது செய்தி

இந்தியா

சமூக ஊடக பதிவுக்காக பத்திரிகையாளர் மீது சைபர் பயங்கரவாத சட்டம்!

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசர் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் சமூக ஊடக பதிவுக்காக, அவர் மீது சைபர் பயங்கரவாதம், இரு தரப்புக்கிடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.ஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ராஜேஷ் குண்டு. இவர் செய்தி இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது சமூக ஊடக கணக்குகளிலும் பல்வேறு பிரச்னைகள்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசர் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் சமூக ஊடக பதிவுக்காக, அவர் மீது சைபர் பயங்கரவாதம், இரு தரப்புக்கிடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.latest tamil newsஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ராஜேஷ் குண்டு. இவர் செய்தி இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது சமூக ஊடக கணக்குகளிலும் பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துக்களை பதிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில், “இன்னும் ஒரு வாரத்தில் சாதி அடிப்படையிலான வன்முறைக்கு ஹிசார் சாட்சியமாக இருக்கும். அது மாநில அளவிலும், பின்னர் தேசிய அளவிலும் ஒரு சோதனைக்கான ப்ளூபிரிண்டாக இருக்கும்.” என பதிவிட்டிருந்தார். இதனை வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து ஹிசார் காவல்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில், இரு தரப்புக்கு இடையே பகையை உண்டாக்குதல், தேசிய ஒருங்கிணைப்புக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் ஐ.டி., சட்டத்தின் படி சைபர் பயங்கரவாத பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீதான வழக்குகளுக்கு ஹரியானா பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil news
கண்டிப்புஇது குறித்து சண்டிகர் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக ராஜேஷ் குண்டு குரல் கொடுத்தார். தற்போது ஹிசார் காவல் துறையினர் சைபர் பயங்கரவாதம் போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். அவர் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும், ஒரு பத்திரிகையாளராகவும் தனது கடமையைச் செய்துள்ளார். வன்முறை குறித்து அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பதிவுகளிட்டுள்ளார். அதன் மூலம் மக்களை எச்சரிக்க விரும்பியுள்ளார். இந்தச் சூழலில் பத்திரிகையாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. என கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Nagaipattinam,இந்தியா
14-ஏப்-202105:28:55 IST Report Abuse
Muthu இங்கேயும் சிலர் இதுபோல நடந்து கொள்வது மனதிற்கு வேதனை அளிக்கிறது. உதாரணத்திற்கு குணா என்ற ஒரு நபர் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். விரைவில் பெரிய பாதிப்பை அவர் சந்திக்கவுள்ளார். அவர் சேர்ந்த சமீபத்திய ஊடகமும் விரைவில் அதனை நம்பகத்தன்மையை இழந்து இந்த குணாவால் பெரிய பிரச்சனையை சந்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்தடுத்து ஜீவா போன்றவர்களும் பாடம் கற்பர்.
Rate this:
Cancel
12-ஏப்-202114:13:38 IST Report Abuse
Ganesan Madurai கருத்து சுதந்திரம் என்ற "பெரியாரின்" வெங்காயம் படுத்தும் பாடு. குண்கட்டா பிடிச்சு உள்ளபோட்டு லாடம் கட்டுனா எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
12-ஏப்-202112:35:59 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் இந்த ப்ராடுகள் செய்யும் அட்டூழியம் மிக அதிகம் , உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X