பொது செய்தி

இந்தியா

'கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போரை துவங்கி உள்ளோம்'

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: “தடுப்பூசி திருவிழா வாயிலாக, கொரோனா வைரசுக்கு எதிரான, இரண்டாவது மிகப்பெரிய போரை துவங்கி உள்ளோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 'தடுப்பூசி திருவிழா'இதற்கிடையே, வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
PM Modi, Tika Utsav, vaccine festival

புதுடில்லி: “தடுப்பூசி திருவிழா வாயிலாக, கொரோனா வைரசுக்கு எதிரான, இரண்டாவது மிகப்பெரிய போரை துவங்கி உள்ளோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


'தடுப்பூசி திருவிழா'

இதற்கிடையே, வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், ஏப்., 11 - 14ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு, 'தடுப்பூசி திருவிழா' நடத்த வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைவரும், இந்த நாட்களில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், தடுப்பூசி திருவிழா, நாடு முழுதும் நேற்று துவங்கியது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போரை, நாம் துவங்கி உள்ளோம். நாட்டு மக்கள், நான் கூறும் விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட உதவி தேவைப்படுவோருக்கு, உதவவேண்டும். குறிப்பாக, வயதானோர் மற்றும் அதிகம் படிக்காதோருக்கு, தடுப்பூசி போட உதவவேண்டும். வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை பெற, உதவ வேண்டும்.


நம்புகிறேன்

முக கவசம் அணிந்து, நம்மையும், நம்மை சுற்றி இருப்போரையும் பாதுகாக்க வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்போர் வசிக்கும் பகுதியை, தனிமைப்படுத்தும் சிறிய மண்டலமாக மாற்றவேண்டும்.

இந்தியா போன்ற அதிக அடர்த்தியான மக்கள் தொகை உள்ள நாடுகளில், கொரோனா வைரசை வீழ்த்த, இது ஒரு முக்கிய வழி. இந்த சமூகத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும், நாம் முழு முயற்சிகளை எடுக்கவேண்டியது அவசியம். ஒரு தடுப்பூசி 'டோஸ்' கூட, வீணடிக்கப்படக் கூடாது.இந்த கொரோனா வைரஸ் பரவலை, நாம் மீண்டும் கட்டுப்படுத்தி வெற்றியடைவோம் என, முழுமையாக நம்புகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி மரியாதை

சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலேவின், 194வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு நேற்று மரியாதை செலுத்தினார். இதுகுறித்து, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: சிறந்த சிந்தனையாளர், தத்துவவாதி மற்றும் எழுத்தாளருமான ஜோதிராவ் புலேவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பெண்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் கிடைக்க, தன் வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர் அவர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஏப்-202115:26:13 IST Report Abuse
g.s,rajan மோடிஜி அவர்களே மொத்தத்தில் கொரோனா என்ற வியாதி பேரைச் சொல்லி ஒரு நிழல் யுத்தம், விலை வாசித் திணிப்பு ,பொருளாதார நெருக்கடி மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரசாங்கம் பல தோல்விகளை மறைக்க கொரோனா வியாதியை ஒரு கேடயமாக பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது மிக மிக வேதனைக்கு உரியது ,
Rate this:
Cancel
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் - செந்தமிழ்நாடு ,இந்தியா
12-ஏப்-202114:22:53 IST Report Abuse
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் அனைத்து தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரப்படும், வடமாநில தொழிலாளிகளுக்கு வீடு கட்டித் தரப்படும், தென் மாநில தொழிலாளிகளுக்கு கப்பல் வாங்கி தரப்படும் டும் டும் டும். எல்லாம் 15 லட்சம் எல்லோர் அக்கௌன்ட்லேயும் போடப்படும் டும் டும் ரீல் மாதிரிதான் அதை எல்லாம் இன்னமும் சிரியஸ்ஸாக எடுத்தது இருக்கிறீர்களே பாஸ் adhe thaan idhuvum
Rate this:
Anand - chennai,இந்தியா
12-ஏப்-202116:20:16 IST Report Abuse
Anandஎல்லோர் அக்கௌன்ட்லேயும் 15 லட்சம் போடுவான்னு அவர் சொன்னாரா? ஏன் இவ்வளவு பொய்யும் புரட்டுடன்...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-ஏப்-202118:29:27 IST Report Abuse
Mirthika Sathiamoorthiதமிழன் அவரு சொன்னது பொய்யாவே இருக்கட்டும்...உண்மையை நீங்க சொல்லுங்க கேப்போம்...தலைமை அமைச்சர் உண்மையில என்ன சொன்னார்?...
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
12-ஏப்-202111:54:31 IST Report Abuse
மன்னிப்பு எல்லாம் ரெடியாதானே இருக்கு அப்ப போய் பிரியாணி செய்து திங்க வேண்டியதுதானே.வாழ்க வளமுடன் .வாழ்க வையகம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X