பொது செய்தி

இந்தியா

கோல்கட்டா அணி கலக்கல் வெற்றி

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021
Share
Advertisement
சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் நிதிஷ் ராணாவின் விளாசல் கைகொடுக்க கோல்கட்டா அணி 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.கோல்கட்டா அணிக்கு சுப்மன்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் நிதிஷ் ராணாவின் விளாசல் கைகொடுக்க கோல்கட்டா அணி 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.



latest tamil news



இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (15) சுமாரான துவக்கம் தந்தார். சந்தீப் சர்மா வீசிய 4வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசிய நிதிஷ் ராணா, விஜய் சங்கர் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதமடித்தார். அபாரமாக ஆடிய ராகுல் திரிபாதி, 28 பந்தில் அரைசதம் கடந்தார். நடராஜன் 'வேகத்தில்' திரிபாதி (53) அவுட்டானார். அடுத்து வந்த ஆன்ட்ரி ரசல் (5), கேப்டன் இயான் மார்கன் (2) ஏமாற்றினர். ராணா (80 ரன், 56 பந்து, 4 சிக்சர், 9 பவுண்டரி) நம்பிக்கை தந்தார்.கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (22) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு விரிதிமன் சகா (7), கேப்டன் வார்னர் (3) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஜானி பேர்ஸ்டோவ் (55) அரைசதம் கடந்தார். முகமது நபி (14), விஜய் சங்கர் (11) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மணிஷ் பாண்டே, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டன. ரசல் வீசிய 20வது ஓவரில் 11 ரன் மட்டுமே கிடைத்தது.


latest tamil news



ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அப்துல் சமத் (19), மணிஷ் (61) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X