உற்சாகத்தில் பா.ஜ., தலைவர்கள்!

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழக தேர்தல் நிலவரம் குறித்து உளவுத் துறை அளித்த அறிக்கையால், மிகவும் உற்சாகமாகி விட்டனர், பா.ஜ., மேலிட தலைவர்கள். 'தற்போதைய ஆட்சியே தொடரும்' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாம். 'தேர்தல் முடிவுகள் வெளியான பின், தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒரு பெரிய திட்டத்தை வைத்துள்ளார் அமித் ஷா' என்கின்றனர், பா.ஜ., வினர். தேர்தலுக்கு ஒரு
 டில்லி உஷ்!

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து உளவுத் துறை அளித்த அறிக்கையால், மிகவும் உற்சாகமாகி விட்டனர், பா.ஜ., மேலிட தலைவர்கள். 'தற்போதைய ஆட்சியே தொடரும்' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாம். 'தேர்தல் முடிவுகள் வெளியான பின், தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒரு பெரிய திட்டத்தை வைத்துள்ளார் அமித் ஷா' என்கின்றனர், பா.ஜ., வினர். தேர்தலுக்கு ஒரு நாள் முன், தமிழக தினசரிகளில் முதல் பக்கம் பரபரப்பான விளம்பரங்கள் வெளியாகி, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விளம்பர யுக்தியை, அ.தி.மு.க., வுக்கு கூறியது, குஜராத் பிரபலம் ஒருவராம். 'இப்படித் தான் ஏற்கனவே, தேர்தல் சமயத்தில் விளம்பரம் கொடுத்து, குஜராத்தில், காங்கிரசை, பா.ஜ., ஒழித்து விட்டது' என்கின்றனர்.


அமைச்சரவையில் காங்.,



'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் கேட்க வேண்டும்' என, ராகுலிடம் கோரிக்கை வைத்துள்ளனர், தமிழக காங்கிரசார். 'காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி நடந்தபோது, அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்கவில்லை. 'இந்த முறை விடக் கூடாது; குறைந்தது இரண்டு அமைச்சர்களுக்கான இடங்களை கேட்டு வாங்கி விட வேண்டும்' என, கூறி வருகின்றனர்.


சபரீசனுக்கு பிரச்னை தான்!



தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இதில் எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். ஆனால், சோதனை முடிந்ததும், எட்டு பக்க ரகசிய அறிக்கையை வருமான வரித்துறையின் தலைவருக்கு அனுப்பியுள்ளார், தமிழக சீனியர் வருமான வரித் துறை அதிகாரி. அதில் பல முக்கியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த அறிக்கையை படித்த மத்திய வருவாய்த் துறை செயலர், ஒரு ரகசிய குறிப்பை எழுதி பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், 'சபரீசன், துபாயில் யாருடன் அடிக்கடி தொடர்பில் உள்ளார் என்பது குறித்து விசாரணை தேவை' என சொல்லப்பட்டுள்ளதாம். 'தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பின், சபரீசனுக்கு பிரச்னைதான்' என்கின்றனர் அதிகாரிகள்.


சோர்வை போக்க தயார்!



தமிழக தேர்தல் முடிந்துவிட்டாலும், முடிவுகள் தெரிவதற்கு, இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். சூறாவளி பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், தங்கள் சோர்வைப் போக்க, கேரளா அல்லது கர்நாடகாவில், 'ஆயுர்வேத மசாஜ்' செய்து கொள்ள விரும்பினர். ஆனால், கொரோனா பரவல், இதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது. தமிழ் புத்தாண்டுக்கு பின், ஒரு சில தலைவர்கள், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சென்று சில நாட்கள் தங்கி, புத்துணர்ச்சியுடன் தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஒரு தலைவர், தாய்லாந்து அல்லது சிங்கப்பூர் செல்ல விரும்பினர். ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, அந்த முடிவை தற்காலிகமாக கைவிட்டுள்ளார், அவர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaishankar C - Chennai,இந்தியா
20-ஏப்-202115:53:34 IST Report Abuse
Jaishankar C 'எக்ஸிட் போல் ' முடிவுகளை வெளியிட 29- ஏப்ரல் வரை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202109:11:23 IST Report Abuse
Venkataramanan Thiru முன்னெச்சரிக்கைக போடும் நாடகம் .தில்லுமுல்லு வெற்றி பெற்றால் அப்போது எங்களுக்கு முன்னமேயே தெரியும் என்று சொல்லத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X