பொது செய்தி

தமிழ்நாடு

சுரப்பா பதவிக்காலம் நிறைவு; அரசு கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, அரசின் நேரடி மேற்பார்வையில், பல்கலை நிர்வாகம் இயங்குகிறது.அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சுரப்பா, 2018 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில், இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்ற, இவரது நியமனம் பல்வேறு

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, அரசின் நேரடி மேற்பார்வையில், பல்கலை நிர்வாகம் இயங்குகிறது.



latest tamil news



அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சுரப்பா, 2018 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில், இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்ற, இவரது நியமனம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.சுரப்பா பதவியேற்றது முதல், அவருக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்தன. பல்கலையின் பேராசிரியர்கள், மாணவர்கள் என, பல்வேறு தரப்பினர், சுரப்பாவின் நிர்வாக சீரமைப்புக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து அறிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சுரப்பாவின் நிர்வாக காலத்தில் டெண்டர் விடுதல், பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில், 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக, தமிழக உயர்கல்வி துறைக்கு புகார்கள் சென்றன.இதுகுறித்த உண்மை நிலையை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கமிட்டியினர், பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் அலுவலர்களிடமும், புகார் அளித்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.சுரப்பாவிடம் மட்டும், நேரில் விசாரணை நடத்தவில்லை. இந்த பரபரப்புக்கு இடையே, தன் மீதான விசாரணைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரப்பா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, சுரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், சுரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. எனவே, இன்று முதல் அண்ணா பல்கலை நிர்வாகம், தமிழக அரசு உயர் கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வருகிறது. உயர்கல்வி துறை செயலர் தலைமையிலான குழுவினர், அண்ணா பல்கலையின் நிர்வாகத்தை கண்காணிக்க உள்ளனர். பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோர், இனி அரசு அனுமதிக்கும் பணிகளை மட்டும் மேற்கொள்வர் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஏப்-202114:22:24 IST Report Abuse
Ramesh R கன்னடக்காரன் ............
Rate this:
Cancel
12-ஏப்-202114:02:49 IST Report Abuse
ஆரூர் ரங் அண்ணாவே யோக்கியர் இல்லை. ஆபாச வர்ணனைக்கு பெயர் போனவர். அந்த ஆளுக்கும் தொழில்நுட்பத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எல்லாம் ஒரு பேரு..........
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-ஏப்-202113:22:39 IST Report Abuse
sankaseshan அரசு கட்டுப்பாடு என்றால் கவர்னரின் மேற்பார்வையில் . அவர் ஒப்புதல் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது .
Rate this:
amuthan - kanyakumari,இந்தியா
12-ஏப்-202118:40:58 IST Report Abuse
amuthanஎப்படி என்றாலும் தமிழருக்கு மொட்டை தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X