எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஏன் ஓட்டு போடவில்லை? பொங்கி எழுந்த வாக்காளர்கள்!

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
'ஏன் ஓட்டு போடவில்லை' என, நம் நாளிதழ் சார்பில், ஓட்டு போடாதவர்களிடம் கருத்துக்கள் கேட்டதற்கு, அவர்கள் அளித்த பதிலில் இருந்து, தேர்தல் ஆணையத்தின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஊழல்களுமே, முக்கியக் காரணங்களாக தெரிய வந்துள்ளன. இக்கருத்துக்களைப் படித்து, தன் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் துல்லியமாய் திருத்தினால், அடுத்த தேர்தலில்அதிக வாக்காளர்களை ஓட்டு போட வைக்க
ஏன் ஓட்டு போடவில்லை? பொங்கி எழுந்த வாக்காளர்கள்!

'ஏன் ஓட்டு போடவில்லை' என, நம் நாளிதழ் சார்பில், ஓட்டு போடாதவர்களிடம் கருத்துக்கள்
கேட்டதற்கு, அவர்கள் அளித்த பதிலில் இருந்து, தேர்தல் ஆணையத்தின் அலட்சியமும்,
அரசியல்வாதிகளின் ஊழல்களுமே, முக்கியக் காரணங்களாக தெரிய வந்துள்ளன.

இக்கருத்துக்களைப் படித்து, தன் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் துல்லியமாய்
திருத்தினால், அடுத்த தேர்தலில்அதிக வாக்காளர்களை ஓட்டு போட வைக்க முடியும்.
போட்டியிடக் கூடிய அரசியல்வாதிகளுக்குஅடிப்படைத் தகுதியை நிர்ணயிக்க,
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்;அதற்கும் தேர்தல் ஆணையம் முயற்சி செய்தால், 100 சதவீத வெற்றி காணலாம்.


தமிழக சட்டசபை தேர்தலைமுன்னிட்டு, வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும், ஒரு
மாதமாக, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் ஆணையமும், ஓட்டளிப்பதன்
அவசியம் குறித்து, வாக்காளர்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தியது.அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓட்டுப்பதிவு, இம்மாதம், 6ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள, 6.28 கோடி
வாக்காளர்களில், 4.57 கோடி பேர் ஓட்டளித்தனர்; 1.70 கோடி பேர் ஓட்டளிக்கவில்லை.
அவர்களில், பலரும் நகர பகுதிகளை சேர்ந்த படித்தவர்கள்.

ஓட்டளிக்க வசதியாக, ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டது. அப்படி இருந்தும், 1.70 கோடி பேர் ஓட்டளிக்கவில்லை. பல நாடுகளில், மக்கள் தொகையே, 1 கோடி இல்லாதபட்சத்தில்,
தமிழகத்தில், அதை விட, அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்காதது ஏன் என்ற, கேள்வி
எழுந்துள்ளது.ஓட்டளிக்காதவர்களை, 'சமூகத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள், சோம்பேறிகள்' என, சிலர் வசைபாடினாலும்,எதற்காக அவர்கள் ஓட்டுப் போட முன்வரவில்லை என்பதை அறிய, 'ஏன் ஓட்டு போடவில்லை' என்ற பகுதி வாயிலாக, நம் நாளிதழ் தரப்பில், விடை காண முடிவுசெய்யப்பட்டது.

அதற்காக, வாக்காளர்கள், தங்களின் மனதை நெருடும் காரணங்களை தெரிவிக்க, மொபைல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டன. அவற்றில், காலை முதலே பலரும் ஓட்டு
போடாததன்காரணத்தை வெளிப்படுத்தினர்.

'பெயரும், போன் எண்ணும் ரகசியமாய் வைக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டதால், ஓட்டு போடாதவர்கள், அதற்கான காரணத்தை, பெயர், தொகுதியுடன் தெரிவித்தனர். ஓட்டு போடாதவர்கள்,எங்கிருந்து கருத்து கூறினர் என்ற, விபரம் மட்டும் தெரிவிக்கப்படுகிறது.
''தபால் ஓட்டு போட படிவம் வழங்கவில்லை; வீடுகளில் பூத் சிலிப் வழங்கவில்லை;
அடையாள அட்டை இருக்கிறது; பட்டியலில் பெயர் இல்லை; முகவரி மாற்றத்திற்கு
விண்ணப்பித்தும் சரிசெய்து தராததால், புதிய முகவரிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட முடியவில்லை; உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஓட்டு போடவில்லை' என,
தேர்தல் ஆணையத்தின் மீது, சிலர் குறை கூறினர்.மற்றவர்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர்.

அதன் விபரம்:


கோவைஅரசு துறையில் பணியாற்றி, நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது, நடவடிக்கைகள்
எடுத்தேன். அதனால், பாதிக்கப்பட்டோரால், என் மகன் உயிரிழக்க நேரிட்டது. மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீசில் புகார் அளித்தேன்.எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், 2009ம் ஆண்டிற்கு பின், எந்த தேர்தல்களிலும் ஓட்டளிக்காமல் உள்ளேன்.


பீளமேடு, கோவை வடக்குஆட்சிக்கு வருவோர், மக்களுக்கான எந்த நலத் திட்டங்களையும் செய்வதில்லை. இலவசம் என்ற பெயரில், மக்களை அடிமையாக வைக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக, பெண்களின் ஓட்டுக்களை கவர, அவர்களுக்கான இலவசங்களை அறிவிக்கின்றனர்.இலவச அறிவிப்பை கேட்டாலே கோபம் வருகிறது. அதன் வெளிப்பாடகவே, ஓட்டு போட விருப்பம் வரவில்லை.


கோவை வடக்குபஸ் கட்டணம் அதிகம் உள்ளது. ஓட்டு போட வசதியாக, கூடுதல் பஸ்களை விடுவதாக
அறிவித்தால் போதாது. பஸ்களை இலவசமாக இயக்க வேண்டும். அப்போது தான், அனைவரும் ஊருக்கு சென்று ஓட்டளிக்க முடியும். பஸ்சில் செல்ல பணம் இல்லாததால், ஓட்டு போடவில்லை.


தேனிசாதாரண நபராக தேர்தலில் நின்று, வெற்றி பெற்ற பின், பல கோடிகளுக்கு அதிபதியாகின்றனர். வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது, மக்களை அடிமையாக வைத்திருந்தாலும், தரமான கல்வி, மருத்துவம், சாலை வசதிகள் வழங்கினர். ஆனால், சுதந்திர நாடு என்ற பெயரில், நம்மூர் அரசியல்வாதிகள், மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிப்பதுடன், அரசு செலவில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அதை பார்க்கும் போது, வெள்ளைக்காரர்களின்ஆட்சியே
பரவாயில்லை என, தோன்றுகிறது.இதனால், அரசியல்வாதிகள் வசதியாக வாழ வழி ஏற்படுத்தி தரக்கூடாது என்பதற்காக, ஓட்டு போடவில்லை.


மதுரை கிழக்குதி.மு.க.,வினர், ஏழு மது ஆலைகளையும்; அ.தி.மு.க.,வினர், நான்கு மது ஆலைகளையும் நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில், மதுவிலக்கு தொடர்பாக, இரு கட்சிகளும் வாய் திறக்கவில்லை. மதுவால், இளம்பெண்கள் விதவையாகி வருகின்றனர்.இரு கட்சிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும். மதுவிலக்கு தொடர்பாக, யாரும் அறிவிக்காததால் தான், இந்த தேர்தலில்
ஓட்டளிக்கவில்லை.


பொன்னேரி

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பின், மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் இல்லை. அதை விட, மக்களை வழிநடத்த கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. இதனால், யாருக்கும் ஓட்டு போடவில்லை.எங்கள் தொகுதி, பல ஆண்டுகளாக தனி தொகுதியாகவே உள்ளது. அனைத்து கட்சிகளும், பட்டியல் இனத்தவரையே வேட்பாளராக அறிவிக்கின்றன. தொடர்ந்து, ஒரே
சமூகத்தை சார்ந்த நபர்களுக்கு ஓட்டு போட விருப்பமில்லை. இதனால், ஓட்டு போடவில்லை.


திரு.வி.க.நகர்ரஜினி அரசியலுக்கு வருவார் என, பல ஆண்டுகளாக காத்திருந்தேன். இந்த தேர்தலிலும் அவர், அரசியலுக்கு வரவில்லை. ஓட்டு போட்டால், ரஜினிக்கு தான் போடுவேன். வேறு யாருக்கும் போட மனதில்லை; இதனால், ஓட்டு போடவில்லை.


மாதவரம்

ஓட்டுப்பதிவுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்ததால், காய்ச்சலுடன் ஓட்டு போடலாமா என, தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீங்கள், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து, ஆம்புலன்சில் வந்து ஓட்டு போடலாம்' என்றனர். அதில், எனக்கு விருப்பம்
இல்லாததால், ஓட்டு போடவில்லை.


திருவையாறு

நானும், என் குடும்பத்தாரும், வெளியூரில் வேலை செய்கிறோம். ஓட்டுப்போட, அரசு பஸ்
இயக்கப்படவில்லை. தனியார் பஸ்சில் செல்ல புறப்பட்ட போது, கட்டணம் அதிகம். அந்த
அளவிற்கு பணம் இல்லாததால், ஓட்டு போட ஊருக்கு செல்ல முடியவில்லை.


விருதுநகர்

பல ஆண்டுகளாக, ரேஷன் கார்டு கேட்டு வருகிறேன். தனியாக வசிப்பதால், ரேஷன் கார்டு தர முடியாது என, அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு தராதவர்களுக்கு, நான் ஏன் ஓட்டு போட வேண்டும்?


பழநி

அரசியல் கட்சி வேட்பாளர்களில், யாரும் நல்லவர்களாக இல்லை; குற்றப் பின்னணி உடையவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட விருப்பமில்லை.


மதுரை வடக்கு

மதுரை வடக்கில் ஓட்டு இருக்கிறது. கோவையில் வேலை செய்கிறேன். ஓட்டுப்பதிவுக்கு
முந்தைய நாள், மதுரை செல்ல பஸ்சே இல்லை. இதனால், சொந்த ஊருக்கு சென்று, ஓட்டளிக்க முடியவில்லை. பொது மக்கள் கால்கடுக்க வெயிலில் நின்று, ஓட்டு போடுவர். அரசியல்வாதிகள் வெற்றி பெற்று விட்டு, பல கோடிகளை குவிப்பர். இதற்கு ஏன், நான் ஓட்டு போட வேண்டும்?


மதுரை மத்திமக்கள் உழைத்தால் தான், அவர்களுக்கு சோறு. மக்கள் மீது, அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. கொரோனா வைரஸ் பரவல் பற்றி கவலைப்பட்டு இருந்தால், பிரசாரத்தின் போது, தலைவர்கள், மக்களை அழைத்து வந்திருப்பரா?பிரசாரம் முடிந்து விட்டதும், கொரோனாவை பற்றி பேசுகின்றனர். அரசியல்வாதிகளின் மீதுள்ள கோபத்தால் ஓட்டு போடவில்லை.


பல்லடம்எனக்கு இரு பெண்கள். இருவரும் கல்லுாரி படிப்பை முடித்து, வேலை கிடைக்காமல் வீட்டில் உள்ளனர். என்னுடைய சம்பளத்தில் மட்டுமே குடும்பம் இயங்குகிறது. சொந்த ஊரான தேனிக்கு சென்று ஓட்டு போட்டு வர, 4,000 ரூபாய் தேவை.என் பெண்களுக்கு வேலை கிடைக்காத, அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் ஓட்டு போடவில்லை.


புதுக்கோட்டை

தொழுகை செய்வதற்கு முன், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான், தொழுகை ஏற்கப்படும். ஓட்டு போட்ட பின், கையில் மை வைப்பதால், தொழுகை செய்யும் போது, அதை சுத்தம் செய்ய முடிவதில்லை. எனவே, ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஓட்டு போடுவேன்.


மயிலாடுதுறைஅரசு துறைகளில் லஞ்சம் அதிகரித்து, லஞ்சம் இல்லாமல் வேலையே நடக்காது என்ற, சூழல் உருவாகி விட்டது. யார் வந்தாலும், ஊழலில் திளைக்க போகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்பதால், ஓட்டு போடவில்லை.


சோழிங்கநல்லுார்ஐந்தாவது, 10ம் வகுப்பு படித்தவர்கள், தேர்தலில் நின்று வெற்றி பெற்றதும், பல கோடி சொத்து சேர்க்கின்றனர். அவர்களுக்கு எப்படி, அந்த பணம் வருகிறது என, தேர்தல் ஆணையம்
விசாரிப்பது இல்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.தேர்தலின் போது மட்டும், வேட்புமனு தாக்கலில் வழங்கப்படும் ஆவணங்களை சரிபார்ப்பது போல, பாவலா காட்டுகின்றனர்.
தேர்தலில் நிற்பவர்களின் விபரங்களை, ஆறு மாதங்களுக்கு முன் பெற்று, அவர்களின்
வருமானம் தொடர்பாக, ஆய்வு செய்ய வேண்டும்.அப்போது தான் குற்றவாளிகள், தேர்தலில் நிற்க முடியாது. இந்த நிலை வரும் வரை, ஓட்டு போட மாட்டேன்.


சிவகங்கை

ஓட்டு போடும் போது, 'பிரின்டர்' கருவியில், வேட்பாளர் பெயர், சின்னம் மட்டுமே வருகிறது. அவற்றுடன், ஓட்டு போட்ட வாக்காளரின் அடையாள எண்ணும் இடம் பெற வேண்டும்.
அப்போது தான் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முடியும். இந்த வசதி ஏற்படுத்தினால் தான் ஓட்டு போடுவேன்.


பூந்தமல்லிஅனைத்து அரசு அலுவலகங்களிலும், லஞ்சம் அதிகரித்துள்ளது. லஞ்சம் கொடுத்தால் தான் ஒரு பணி நடக்கும் என்ற, நிலை உள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களும், ரவுடிகளாக
உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரும், 10 கோடி ரூபாய் செலவு செய்து, 50 கோடி ரூபாய்
சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அப்படி இருக்கையில், வரிசையில் நின்று, எப்படி ஓட்டளிக்க முடியும்?


அனகாபுத்துார்

எங்கள் வீட்டில், ஐந்து ஓட்டுகள் இருந்தன. ஒவ்வொரு தேர்தலிலும், அரசு எப்படி இருந்தாலும், எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறோம். இந்த தேர்தலில், ஒரு ஓட்டு
மட்டுமே போட முடிந்தது. நான்கு ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன. மற்ற ஓட்டுச்சாவடிகளுக்கு அலைந்தும், அதிகாரிகளிடம் கேட்டும், உரிய பதில் இல்லாததால் ஓட்டளிக்கமுடியவில்லை.


கோவை

என் ஓட்டு, திருச்சியில் உள்ளது. வேலை நிமித்தமாக, கோவையில் உள்ளேன். கொரோனா
பரவல்காரணமாக வெளியே செல்லவேண்டாம் என, சுகாதாரத் துறைஅறிவுறுத்தி வருகிறது. இதனால்,ஓட்டு போட, திருச்சிக்கு செல்லவில்லை.


வேளச்சேரிஎன், 18 வயது முதல் ஓட்டு போட்டு வருகிறேன். வாக்காளர் பட்டியலில் இருந்து, என் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. ஓட்டுச் சாவடிக்கு சென்று, 'சேலேஞ்ச்' ஓட்டு போட முயன்றேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.


நன்மங்கலம்வாக்காளர் பட்டியலில், என் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. என் மனைவிக்கு இருந்தது. உயிருடன் இருக்கும் என் பெயர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து, '1950' தொலைபேசி எண்
மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். முறையாக, அவர்கள் பதிலளிக்கவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும், எனக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.


தாம்பரம்

தேர்தல் தேதி அறிவித்ததில், எனக்கு விருப்பம் இல்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் தேவையற்றது. இதனால், பிரசார கூட்டங்களில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால், தொற்று அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.


கடலுார், வடலுார்

மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், எங்களால் ஓட்டளிக்க முடியவில்லை. எனவே, 'ஆன்லைன்' வாயிலாக ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதுச்சேரி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான், குணம் அடைந்து, வீட்டிற்கு திரும்பினேன்.
இருப்பினும், மறுநாள் வீட்டிற்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு கவசங்களை வழங்கி, கட்டாயம் அணிந்து தான் செல்ல வேண்டும் என, வலியுறுத்தினர். இது, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதனால்,ஓட்டு போடவில்லை.


திருவான்மியூர்

தமிழக அரசியல் மீது வெறுப்பு வந்து விட்டது. எதற்கு எடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உருவாக்கியுள்ளன. ஊடகங்களை பார்த்தால், மக்களுக்கு
பைத்தியமே பிடித்து விடும்.ஏனெனில், ஒவ்வொருவரும் அவரது எதிர்கட்சியினரின் செயல்பாடுகளையும், ஊழலையும் தான் அடுக்கடுக்காக கூறுகின்றனர். அவர்கள் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்தவே, நான் ஓட்டு போடவில்லை.


திருவான்மியூர்

எனக்கு சொந்த ஊர் நாகை. ஓட்டு போடச் சென்று வர, 1,000 ரூபாய் தேவை. குறைந்த சம்பளம் வாங்கும் என்னால் ஓட்டு போடுவதற்காக மட்டும், 1,000 ரூபாய் செலவு செய்ய முடியாது. 'ஆதார்' எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து, எங்கு வேண்டுமானாலும், அவரவர் ஓட்டை போட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புத்துார்

எந்த ஆட்சி வந்தாலும், அரசு பணியில் உள்ளவர்கள், தங்களது சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்தால், 10 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. லஞ்சம் இல்லாமல், அரசு துறையில், எந்த வேலையும் நடப்பது இல்லை.கமல், திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர், ஆட்சிக்கு வந்தாலும், எந்த பயனும் இல்லை; வரப்போவதும் இல்லை. அவர்களால் உணர்ச்சிவசமாக பேச மட்டும் தான் முடியும். தி.மு.க., -- அ.தி.மு.க.,
ஊழல்வாதிகள்.


மேடவாக்கம்

மூன்று முறை விண்ணப்பித்தும், வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்தது மட்டும் தான் மிச்சம். ஜனநாயக கடைமையை ஆற்ற நினைத்தாலும், அரசு
அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு இல்லாததே, ஓட்டுப் போட முடியாததற்கு காரணம்.


மதுரை

மதுரையில் அடிப்படை வசதிகளே இல்லை. சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டி, பலமுறை சம்பந்தப்பட்ட வார்டு அலுவலகத்திற்கு சென்று, புகார்
தெரிவித்தேன். எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் மீதுஏற்பட்ட அதிருப்தி காரணமாகஓட்டுப் போடவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
16-ஏப்-202119:23:57 IST Report Abuse
Velusamy Ramesh Booth slip should sent as texted message to the person through registered mobile number.
Rate this:
Cancel
rajasekaran - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-202111:43:44 IST Report Abuse
rajasekaran i am working in Abu dhabi, last year in 2019 i took leave for 3 days came to my home town and voted. But this time due to covid-19 lot of travel restrictions and quarantine. I need 14 days leave to vote. If govt arrange for voting in Indian embassy or online vote or postal vote. there will be considerable increase in vote %.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
14-ஏப்-202107:21:13 IST Report Abuse
ocean நோட்டா என்பது நல்லாட்சியை வகுப்பதற்கு கிடைத்ததொரு அரிய ஆயுதம். ஒவ்வொரு தேர்தலிலும் அந்தந்த தொகுதிகளில் சேரும் இத்தகைய அதிருப்தி வாக்குகளை மொத்த வாக்குகளில் இருந்து குறைந்த பட்சம் பத்து சதவீதம் அதிக பட்சம் இருபது சதவீதம் என்று அளவிட்டு மொத்த வாக்குகளில் இருந்து கழித்து மீதமுள்ளவற்றில் அதிக வாக்குகள் பெற்றவரை தேர்வு செய்யலாம். நோட்டா வாக்காளர் என்ற அதிருப்தியாளர்களின் எண்ணிக்கையை மேற்படி மார்ஜின் வைத்து கணக்கிட்டு மொத்த வாக்கெடுப்பில் கழித்தால் மீதம் வருவது திருப்தி வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கை. நோட்டாவை கழித்த வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேர்வின் அளவை நிர்ணயிக்க வேண்டும். வெறுமனே நோட்டா ன்று சொல்லி அதை கணக்கில் எடுக்காமல் விடக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X