பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 12, 2021
Share
'இந்த சந்தேகம், தொற்று ஏற்பட்ட சில தலைவர்கள் சார்ந்துள்ள கட்சி மேலிடத்திற்கும் உள்ளது. அதனால் தான், அந்த மேலிடங்கள், தொண்டர்கள், பிரமுகர்களை அணுக விடுவதில்லை; அறிக்கை மூலமே, உத்தரவிடுகின்றன; இருப்பை காட்டிக் கொள்கின்றன...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தேர்தல் முடிந்ததும், பல அரசியல் தலைவர்கள், தங்களுக்கு கொரோனா
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'இந்த சந்தேகம், தொற்று ஏற்பட்ட சில தலைவர்கள் சார்ந்துள்ள கட்சி மேலிடத்திற்கும் உள்ளது. அதனால் தான், அந்த மேலிடங்கள், தொண்டர்கள், பிரமுகர்களை அணுக விடுவதில்லை; அறிக்கை மூலமே, உத்தரவிடுகின்றன; இருப்பை காட்டிக் கொள்கின்றன...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தேர்தல் முடிந்ததும், பல அரசியல் தலைவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி, சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் சிலருக்கு, தேர்தலுக்கு முன்னதாகவே தொற்று ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று மறைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.

'எல்லாரும் ஒரு வழியில் போகையில், நீங்கள் மட்டும் தனி வழியில் போய், அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்கிறீர்களோ என்ற, சந்தேகம் வருகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா அறிக்கை: கோவில்கள், மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டால் தான் சமுதாய, கலாசார சமத்துவம் கிடைக்கும். தனியார்மயமாக்குவதோ, இன்னொரு அமைப்பிடம் வழங்குவதோ சரியாக இருக்காது. மோசமான நிர்வாகத்திற்கு, தனியார்மயம் தீர்வாகாது.

'முன்னர் இதுபோன்ற வேலைகளை, காங்., போன்ற சில கட்சிகள் மேற்கொண்டன. அதைப் பார்த்து, இப்போது, பா.ஜ.,வும் இப்படி செய்கிறதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை: பா.ஜ., ஆளும் அசாமில், காங்., வேட்பாளர்கள், 20 பேர் ராஜஸ்தான் மாநில ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.,வின் குதிரை பேரத்திலிருந்து அவர்களை மீட்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'தமிழக மக்களின், நடுநிலையாளர்களின், மாநில நலம் விரும்பிகளின் எண்ணமும் இதுவாகத் தான் இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், டாக்டர் ஹண்டே அறிக்கை: தமிழகத்தில் மீண்டும், முதல்வர், பழனிசாமி., ஆட்சி தான் தொடர வேண்டும். ஏனெனில், கடந்த நான்காண்டுகளில் அவர் அருமையான பெயரை சம்பாதித்துள்ளார்; சிறப்பான நிர்வாகத்தை அளித்துள்ளார்.

'உண்மை தான். உங்கள் கட்சியில் உள்ள சிலரும் அப்படித் தானோ... என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: எளிய வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட, பல கோடிகளை பலர் செலவு செய்கின்றனர்.

'எல்லா கட்சித் தலைவர்களும் இதுபோல சொல்லி, தேர்தல் பிரசாரம் போல களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கொரோனா ஓடி விடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இந்த நேரத்தில், கட்சியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முக கவசம், கையுறை பயன்படுத்துவது, தனிநபர் இடைவெளி மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு கபசுர குடிநீர் அருந்துங்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X