முக கவசம் இன்றி பிரார்த்தனை ம.பி., அமைச்சரால் சர்ச்சை

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
போபால்: கொரோனா பரவலின் இரண்டாவது அலையை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, மத்திய பிரதேச விமான நிலையத்தில் பிரார்த்தனை நடத்திய அமைச்சர், முக கவசம் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ள, 10 மாநிலங்களில், ம.பி.,யும் இடம்பெற்றுள்ளது. இங்கு கடந்த, 24 மணி

போபால்: கொரோனா பரவலின் இரண்டாவது அலையை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, மத்திய பிரதேச விமான நிலையத்தில் பிரார்த்தனை நடத்திய அமைச்சர், முக கவசம் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news


ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ள, 10 மாநிலங்களில், ம.பி.,யும் இடம்பெற்றுள்ளது. இங்கு கடந்த, 24 மணி நேரத்தில், 4,800 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. 43 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தொற்றுப் பரவலின் இரண்டாவது அலையை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, பா.ஜ., வைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர் உஷா தாக்கூர், இந்துார் விமான நிலையத்தில் பிரார்த்தனை நடத்தினார்.விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள, மராத்திய அரச குடும்பத்தை சேர்ந்த, தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சிலை முன் அமர்ந்து, பாடல்களை பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.அவருடன் இணைந்து, விமான நிலைய இயக்குனர் ஆர்யமா சன்யாஸ் மற்றும் ஊழியர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர், முக கவசம் அணியாமல் அதில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இதன், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் உஷா தாக்கூர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது எப்போதுமே முக கவசம் அணிவதில்லை. மாட்டு சாணம்இது குறித்து செய்தியாளர்கள் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளனர்.அப்போது, 'என் வீட்டில் மாட்டு சாணம் வைத்து, சுத்தப்படுத்துவது வழக்கம். ஹனுமான் சலிசாவை தினமும் கூறுவேன். எனவே என்னை எந்த தொற்றும் அண்டாது' என தெரிவித்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஏப்-202112:54:22 IST Report Abuse
தமிழவேல் இதுக்கும் மேல உள்ள பெரிய பெரியத் தலைகளே கடைபிடிக்கல.. இதை போயி பெருசுபடித்திகிட்டு..
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
12-ஏப்-202110:55:43 IST Report Abuse
Apposthalan samlin உங்களை ஒன்னு மில்லியன் பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-ஏப்-202112:18:57 IST Report Abuse
Visu Iyerஇன்றைய சூழலில்...பெரியார் கட்சி மாறிடுவார் என சொல்றீங்க புரிகிறது....
Rate this:
Cancel
K.L.ESWARAN - Bodinayakanur,இந்தியா
12-ஏப்-202106:46:57 IST Report Abuse
K.L.ESWARAN அமைச்சர் தமிழ் நாட்டில் இல்லை. இங்கே ஸ்டாலின் முகக்கவசம் இல்லாமல் சைக்கிள் ஓட்டினாலும் அவருக்கு அபராதம் கிடையாது. சாதாரண மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் தான் அபராதம் விதிக்கப்படும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-ஏப்-202112:18:31 IST Report Abuse
Visu Iyerமக்களிடம் உள்ள கருப்பு பணம் தான் ஒழிக்க படும்.. அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணம் இன்னும் சேர்க்கப்படும் என்று சொல்றீங்க.. அதுக்காக மோடி ஜி யை பதவி விலகவா சொல்ல முடியும் என்று கேட்பது புரிகிறது. என்னமா பூடகமா பேசுறீங்க ஐயா.. நீங்க கிரேட்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X