பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: நவுரு தீவின் கதை தெரியுமா?

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம், கோவையிலிருந்து எழுதுகிறார்:ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு. கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப்
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



ஆர்.ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம், கோவையிலிருந்து எழுதுகிறார்:

ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு. கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.

காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன; நவுரு அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.பத்தாயிரம் பேர் மட்டுமே உள்ள அந்நாட்டின் அரசிடம், 170 கோடி டாலர்கள் இருந்தன. அவ்வளவு பணத்தையும் என்ன செய்தனர்... மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, 'டிவி' உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்தனர்.

அரசின் சார்பில், விமானக் கம்பெனி துவக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு, மக்கள் இலவச பயணம் சென்றனர்.ஒரே ஒரு நபருக்காக, விமானம் புறப்பட்டு, சிங்கப்பூர் சென்ற கதை எல்லாம் உண்டு. ஆளே இல்லாத ஓட்டலில், ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.இப்படி, 15 ஆண்டுகள் ஆடம்பரங்கள் அனைத்திலும், நவுரு மக்கள் திளைத்தனர்.ஒரு கட்டத்தில் நவுரு தீவில், பாஸ்பேட் தீர்ந்தது; கம்பெனிகள் விடை பெற்றன; அரசின் வருமானம் நின்றது.


latest tamil news


இலவச உணவு காரணமாக, மக்கள் உழைக்க முடியாவண்ணம் குண்டாகி இருந்தனர். இளைய தலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி போன்றவை குறித்து தெரியவில்லை. பாஸ்பேட் சுரண்டப்பட்டதால், அந்த மண்ணும், விவசாயத்திற்கு தகுதியற்றதாக மாறி விட்டது.வேறுவழியின்றி, நவுரு அரசு, தன் நாட்டுக் குடியுரிமையை, பணத்திற்கு விற்றது.மாபியா கும்பல் எல்லாம், நவுரு வங்கியில் பணத்தைப் போட்டு, கறுப்பை வெள்ளையாக்கினர். கடைசியாக உலக நாடுகள், நவுரு மேல் பொருளாதாரத் தடை விதிக்க, மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.இன்று, உலகின் ஏழ்மை நிரம்பிய, ஆரோக்கியம் குறைவானோர் அதிகம் இருக்கும் நாடாக நவுரு ஆகிவிட்டது.

ஆஸ்திரேலியா அரசு கொடுக்கும் நிதி உதவியால் தான், நவுரு மக்கள் ஒரு வேளை உணவாவது உண்கின்றனர்.நம் நாட்டு அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கையைப் படிக்கையில், இலவசங்களால், நாமும், நவுரு தீவாகி விடுவோமோ என, அச்சம் ஏற்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kiran Babu -  ( Posted via: Dinamalar Android App )
12-ஏப்-202122:05:40 IST Report Abuse
Kiran Babu பறவை எச்சம்
Rate this:
Cancel
இராவணன் - Rameshwaram,இந்தியா
12-ஏப்-202121:16:10 IST Report Abuse
இராவணன் நவுரு நவுரு அதிமுக வரட்டும்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
12-ஏப்-202120:12:41 IST Report Abuse
கொக்கி குமாரு திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி ஆரம்பித்து வைத்த தேவையற்ற இலவசங்களால் தமிழகத்தின் இப்போதைய கடன் 5 லட்சம் கோடிகளை நெருங்குகிறது. இது இப்படியே சென்றால் எதிர்காலத்தில் தமிழகம் திவாலாகி இங்கு இருக்கும் இளைஞர் கூட்டம் வட இந்தியாவை நோக்கி வடை சுட்டு விற்கவும், டீ கடை நடத்தவும் ஓட்டம் பிடிப்பார்கள். அப்போது அவர்களால் சென்னையை தாண்டி கூட ஹிந்தி தெரியாமல் செல்ல முடியாது. அப்போது தெரியும் வட இந்தியன் இங்கு வந்து பாணி பூரி விற்கிறான், பேல் பூரி விற்கிறான், பாக்கு போட்டு கொண்டு பீடா வாயனாக திரிகிறான் என்றெல்லாம் நாம் கிண்டலடித்ததின் கர்மா வலி. தமிழகத்தின் எந்த ஒரு பிரச்சனைகளை தொட்டாலும் அது கட்டு மரம் கருணாநிதியிடம் சென்று முடிவடைகிறது. திருட்டு திமுக. தமிழகத்தின் 50 வருட சாபம். எப்போது மக்கி மண்ணோடு மண்ணாகுமோ தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X