பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலால் 2.4 கோடி குழந்தைகள் படிப்பை கைவிடும் அபாயம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடக்கூடும்' என்ற தகவல், ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடக்கூடும்' என்ற தகவல், ஆய்வில் தெரியவந்துள்ளது.latest tamil news


உலகில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில், இந்த கொரோனா நெருக்கடியால், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவிலும், ஏராளமான ஏழைக் குழந்தைகள், பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.'ஆன்லைன்'கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடப்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி, ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக, சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:58:45 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202101:57:17 IST Report Abuse
Matt P 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடப்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி, ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்...இலவசமாக மாநில அரசுகள் மக்களுக்கு என்னென்னவோ கொடுக்கின்றன இந்த மாதிரி குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவும்படியான உபகரணங்களை கொடுக்கலாம்.வளர்ந்த நிறுவநங்களும் , வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனகளும் உதவலாம் . இதன் மூலம் அவர்கள் நிறுவநங்களுக்கு பெயர் கிடைத்து அவர்கள் தொழில் மேலும் வளர்ச்சியடையலாம் ..படித்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலியே படிப்பு சொல்லி கொடுக்கலாம் தற்போது நிறைய பிள்ளைகள் வீட்டிலிருந்தே பெற்றோர்கள் உதவியிலியே தற்போது படிக்கின்றன மனதிருந்தால் மார்க்கமுண்டு. தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சீமான், கமல் கட்சியினர் குழ்நதைகள் தொடர்பான நற்பணிகளை தொடரலாம் . சும்மா தமிழ் தமிஸ்ன்னு கூவிக்கிட்டிருந்தா தமிழ்நாடு வாழ்ந்து விடாது வளர்ந்து விடாது . நடைமுறையில் காட்டணும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-ஏப்-202114:38:28 IST Report Abuse
J.Isaac NEP அதற்காகத்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X