திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு?

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பீஜிங்: திபெத்தின் யார்லங் ஸாங்போ நதியின் குறுக்கே, மிக பிரமாண்ட அணையை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது, இது சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் இந்தியா தரப்பில் கவலையை ஏற்படுத்திஉள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், உலகின் கூரை என, வர்ணிக்கப்படுகிறது. இமய மலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில், யார்லங் ஸாங்போ என்ற நதி உள்ளது.மிக ஆழமான மலைப்

பீஜிங்: திபெத்தின் யார்லங் ஸாங்போ நதியின் குறுக்கே, மிக பிரமாண்ட அணையை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது, இது சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் இந்தியா தரப்பில் கவலையை ஏற்படுத்திஉள்ளது.



latest tamil news



சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், உலகின் கூரை என, வர்ணிக்கப்படுகிறது. இமய மலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில், யார்லங் ஸாங்போ என்ற நதி உள்ளது.மிக ஆழமான மலைப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நதியின் குறுக்கே, பிரமாண்ட அணை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது.


latest tamil news



இந்த அணையின் வாயிலாக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க, சீனா திட்டமிட்டுள்ளது.'இந்த அணை, அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான திபெத் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன், அவர்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த இடங்களை விட்டு குடிபெயர வேண்டிய நிலையை ஏற்படுத்தும்' என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆற்று மீன்கள் மற்றும் விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் இந்த திட்டம் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.'திபெத் ஆற்றில் இருந்து பாயும் நீர், இமயமலையை கடந்து இந்திய பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா நதியில் வந்து சேரும் நீர்வழித்தடத்தில் தடையை ஏற்படுத்தும்' என, இந்திய வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-ஏப்-202121:34:42 IST Report Abuse
bal திபெத்தும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
12-ஏப்-202117:42:28 IST Report Abuse
S.P. Barucha இந்தியா ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-202116:08:54 IST Report Abuse
J.V. Iyer திபெத்தை சீனாவின் பிடியிலிருந்து விடுவித்தால்தான் உலக அமைதி திரும்பும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X