பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது

Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : 'முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களை, வங்கிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது' என, அனைத்து வங்கிகளுக்கும், தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அந்த சுற்றறிக்கை விபரம்: கொரோனா தொற்று பரவல் தொடர்பாக, தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை, ஏப்ரல், 30 வரை, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், வங்கிகளில் பின்பற்ற வேண்டிய,

சென்னை : 'முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களை, வங்கிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது' என, அனைத்து வங்கிகளுக்கும், தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



latest tamil news



அந்த சுற்றறிக்கை விபரம்: கொரோனா தொற்று பரவல் தொடர்பாக, தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை, ஏப்ரல், 30 வரை, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், வங்கிகளில் பின்பற்ற வேண்டிய, வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி, வாடிக்கையாளர்கள் முக கவசம்அணியாமல், வங்கிகளுக்குள் வர அனுமதிக்கக்கூடாது.

முக கவசம் அணித்து வரும் வாடிக்கையாளர்களும், வங்கியை விட்டு செல்லும் வரை, வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் அணிது இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும்,உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடுதல் இல்லாத வகையில், கிருமிநாசினி திரவம் மற்றும் கை கழுவும் திரவங்களை வங்கி நுழைவாயிலும், வளாகத்தின் பொது இடத்திலும் வைக்க வேண்டும்.


latest tamil news


வங்கியில் அதிககூட்டம் கூடுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அலுவலக, 'லிப்டு'களை, இரண்டு அல்லது நான்கு நபர்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே, தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வங்கி கிளைகளில், அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.அரசு விதிகளின் படி,கொரோனா தடுப்பூசி போடுவதற்கானஅனைத்து நடவடிக்கைகளையும், வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202116:58:13 IST Report Abuse
ஆப்பு வங்கிக்கு செல்ல முதல்ல நம் கணக்கில் பணம் இருக்கணும்... ஹி.. ஹி
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-202116:10:53 IST Report Abuse
J.V. Iyer முகக்கவசம் அணியாதவர்கள் வெளியிலேயே செல்லமுடியாதவாறு செய்யுங்கள். தண்டனை கடுமையாக இருக்கட்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஏப்-202115:09:08 IST Report Abuse
Ramesh Sargam முக கவசம் அணிந்து சென்றால், ஏதோ 'வங்கி கள்வன்' (bank robber) வந்துவிட்டதுபோல் பார்க்கிறார்கள் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இன்னும் என்னவெல்லாம் அவமானப்பட வேண்டுமோ...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X