அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதில், ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.நாடு முழுவதும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக,

சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.latest tamil newsஇதில், ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.நாடு முழுவதும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்டிரா, டில்லி, கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்பட பல மாநிலங்களில், தொற்று பரவல் அதிகம் உள்ளது.

தமிழகத்தில் நேற்று, 88 ஆயிரத்து, 538 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 6,618 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் மட்டும், 2,124 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து நேற்று, 2,314 மட்டுமே வீடு திரும்பினர். 37 ஆயிரத்து, 673 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, அரசு மருத்துவமனைகளில், படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பகல், 12:00 மணிக்கு இந்த ஆலோசனை நடக்கிறது. அதில், முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


latest tamil news


ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது; பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது; தடுப்பூசி கொள்முதலை அதிகமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பரவல் அதிகமானால், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர ஊரடங்கு அறிவிப்பது குறித்தும், ஆலோசனையில் முடிவு எடுக்கப்படலாம் என, தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
12-ஏப்-202113:38:14 IST Report Abuse
Muthiah.G நிரந்தர முதல்வர்,மக்களுக்கு என்றும் கவலையில்லை, ஆனால் கொள்ளையர்களுக்கு கவலை
Rate this:
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
12-ஏப்-202113:54:38 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது.உற்சாகத்தில் MKS / பீதியில் EPS / OPS...
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
12-ஏப்-202111:54:41 IST Report Abuse
Ketheesh Waran கொரோனா தொற்று பரவலய் நிறுத்த நிர்வாக திறமை இல்லாத அதிமுக அரசால் முடியாது தேர்தலில் தோல்வியடைந்த ஊழல் அதிமுக அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் அல்லது பதவி நீக்கப்படவேண்டும்
Rate this:
Nachimuthu - mettur,இந்தியா
12-ஏப்-202115:41:44 IST Report Abuse
Nachimuthuசுடலை பதவி ஏற்ற உடன் கோரோனோ ஓடி விடுமா...
Rate this:
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா
12-ஏப்-202119:23:04 IST Report Abuse
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது நீயே ஓடிவிடுவ அப்புறம் என்ன koraanaa என்னவோ பிநாத்துன முடிவே பண்ணிட்டிய...
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-ஏப்-202111:35:27 IST Report Abuse
pattikkaattaan கொரோனாவை பரப்பியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் அரசியல்வாதிகள்தான் ... பரப்புரை பரப்புரை என்று இவர்கள் சென்றதெல்லாம் கொரோனாவை பரப்பத்தான் ... வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் ஆகிறது .. இன்னும் தூங்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X