"என் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடம்” - கணவர் மறைவு குறித்து ராணி எலிசெபத்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
லண்டன்: 73 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்த தனது கணவரும், இங்கிலாந்து இளவரசருமான பிலிப்பை, 99 இழந்துள்ள ராணி 2-ம் எலிசெபத், தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப். இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், 2017-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.

லண்டன்: 73 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்த தனது கணவரும், இங்கிலாந்து இளவரசருமான பிலிப்பை, 99 இழந்துள்ள ராணி 2-ம் எலிசெபத், தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.latest tamil news


இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப். இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், 2017-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். உடல்நலக்குறைவால் வெள்ளியன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதன் பின் வரும் சனியன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும். தற்போது மேற்கு லண்டனிலுள்ள விண்ட்சர் கோட்டையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அரச குடும்பத்திலிருந்து இருந்து மனைவி மேகனுடன் பிரிந்து சென்ற அவரது பேரன் ஹாரியும் இறுதிச்சடங்கிற்கு வருகிறார். அவர் மனைவி கர்ப்பமாக இருப்பதால் வரவில்லை என அரண்மனை வட்டாரங்கள் கூறின. கொரோனா கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு கூட்டத்தை தவிர்க்க இறுதிச்சடங்கின் பொது நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தேவாலயத்தில் உள்ள சபை வெறும் 30 பேர் பங்கேற்கும் வகையில் மட்டுமே உள்ளது.


latest tamil news


தந்தை மறைவு குறித்து இளவரசர் ஆண்ட்ரூ கூறியதாவது: என் தாய்க்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்த இழப்பை மற்றவர்களை விட அவர் அதிகம் உணர்கிறார். அவருக்கு ஆதரவாக உள்ளேன். என் தந்தையாக அவரை நேசிக்கிறேன். சிறப்புக்குரிய மனிதர் அவர். மிகவும் அமைதியானவர். அரச குடும்பமே பெரும் இழப்பை உணர்கிறார்கள். ராணியால் அவரது இழப்பை நம்ப முடியவில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றதாக குறிப்பிட்டார். என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202117:02:21 IST Report Abuse
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி இந்த வயதியிலும் (95) இத்தனை நாள் கழித்து கணவனை இழந்து விதவை கோலத்தில் துயரப்படும் இராணி எலிசபெத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.
Rate this:
Cancel
12-ஏப்-202113:49:01 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த வயதில் விதவையாகி தனிமையில் வாடுவது கொடுமை.🤔 ஆழ்ந்த இரங்கல் .
Rate this:
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
12-ஏப்-202114:30:43 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிதுஉன்னுடைய BATCH அது தான் வருந்துகின்ற பாவம் உனக்கும் இதே நிலை தான ஏன் எனில் நீ 1947 க்கு முன்னர் நீ பார்த்த விஷயம் எல்லாம் பேசுவ அதனால் சொன்னேன்...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-ஏப்-202112:02:11 IST Report Abuse
S.Baliah Seer இங்கிலாந்து தாய் இந்திய தாயுள்ளம் கொண்டமைக்கு நன்றி, ராணியின் மனித நேயம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
Rate this:
12-ஏப்-202113:51:11 IST Report Abuse
ஆரூர் ரங்வெள்ளை அடிமை புத்தி😝. நம்மை காலனி ஆதிக்கம் செலுத்தி சுரண்டிக் கொழுத்த குடும்பத்துக்கு இப்படி ஒரு ஆதரவா ,,?...
Rate this:
12-ஏப்-202113:53:40 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அதற்க்கு தான் ஒருத்தன் பால்ய விவாகம் ஏன்னு சொல்லி ஓடி வந்து விட்டான் , நம்ம கழுத்தை அறுக்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X