மியான்மர் வன்முறையை தடுக்க முயலும் ஐநா; தடைபோடும் சீனா..!

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
யாங்கன்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் நாடாளுமன்ற தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அவசர நிலையை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுவரை 550-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில்

யாங்கன்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் நாடாளுமன்ற தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அவசர நிலையை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



latest tamil news



இதுவரை 550-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் தூண்டுகோலாக இருப்பவர்களுக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு உலக நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி வந்தன. மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு அதிக ஆயுத சப்ளை செய்யும் இரு நாடுகள் ரஷ்யா மற்றும் சீனா ஆகும். சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தப்படி மியான்மர் ராணுவம் இந்த இரு நாடுகளின் தயாரிப்பில் உருவான ஆயுதங்களை விலை கொடுத்து வாங்குகிறது.

இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோசப் குஹெல் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகின் பெரும் சக்திவாய்ந்த நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்து வருவதன் காரணமாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மியான்மர் வன்முறை விவகாரத்தில் தலையிட விடாமல் இந்த இரு நாடுகளும் தடை போட்டு வருகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


latest tamil news



முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மூத்த தலைவர் ஆங் சான் சூ காயை விடுதலை செய்ய கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியனின் நேரடி முதலீடு மியான்மரில் மிகக் குறைவு. இதனால் ஐரோப்பிய யூனியன் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என ஜோசப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் சீனாவின் நேரடி முதலீடு 19 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதிக தொகையை மியான்மர் நாட்டில் முதலீடு செய்து இருக்கும் நாடு சீனா. ரஷ்யா, சீனா ஆகியவை தங்கள் நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் பேச்சுவார்த்தையை திட்டமிட்டு தள்ளிப் போடுவதாகவும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
12-ஏப்-202115:02:52 IST Report Abuse
Unmai vilambi சீனா அழிக்கப்படவேண்டிய நாடு . இல்லையேல் உலகத்தின் மற்ற எல்லா நாடுகளையும் அது முழுங்கிவிடும் .
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
12-ஏப்-202117:25:50 IST Report Abuse
Hariஎன்ன செய்ய நம்மொளோட சொந்தங்கள்தானே காசுக்கு ஆசைப்பட்டு டிரம்ப் அவர்களை தோற்கடித்தார் அதன்பலனை உலகமக்கள் அனுபவிக்கப்போகிறார்கள் சீனாக்காரனும் ,இலங்கைக்காரனும் சிந்திப்பது ஒன்றே அதாவது தனக்கு எதிர்கால மக்கள் பற்றி கவலை இல்லை தான் தனது சுயநலம் அதனால எந்த எல்லைக்கும் செல்லும்,அதற்குள் இணையும் நாடுகளுக்கு ஒத்துப்போகும் சிலகாலம் பின் பழையபடி வேறு நாடு ....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஏப்-202112:32:02 IST Report Abuse
M  Ramachandran உலகளவில் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்கிறது. எல்லா நாடுகளும் சேர்ந்து நிர்மூலமாக்கி கம்யூனிஸ்டுகளை ஒளித்து சன நாயக நாடாக மாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஏப்-202112:20:42 IST Report Abuse
Ramesh Sargam சீனாவினால் பல பிரச்சினைகள் மற்ற நாடுகளுக்கு. ஏதாவது ஒரு வழியில் சீனா மற்றநாடுகளுக்கு பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சீனா அழிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X