பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டபடி தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: 'உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட, செய்திக்குறிப்பு: அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர்,

சென்னை: 'உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.



latest tamil news



தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட, செய்திக்குறிப்பு: அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவி களுக்கு, திட்டமிட்ட படி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18ம் தேதி, காலை மற்றும் மதியம்; 19ம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில், தேர்வு நடக்க உள்ளது.


latest tamil news


விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை, www.tnpsc.gov.in; www.tnpscexams.in ஆகியவற்றில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வு நடக்கும் இடத்தை அறிந்து கொள்ள, தேர்வு நுழைவு சீட்டில், 'கியூஆர் கோடு' அச்சிடப்பட்டுள்ளது. அதை, 'ஸ்கேன்' செய்து, 'கூகுள் மேப்' வழியே, தேர்வுக்கூடம் செல்லலாம். தேர்வு அறைக்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
12-ஏப்-202118:41:22 IST Report Abuse
சீனி சூரப்பாவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக மாற்றினால் தான், அண்ணா பல்கலைகழக தேர்வு மோசடிக்கு முடிவு கட்டினமான மாதிரி, டி.என்.பி.எஸ்.சி மோசடிக்கு ஒரு முடிவு கொண்டுவருவார்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஏப்-202107:49:44 IST Report Abuse
தல புராணம் திட்டமிட்டபடி தேர்வு இஷ்டப்படி பணி நியமனம்.. இதான் இந்த ஊழல் சாக்கடை டி.என்.பி.எஸ்.சி யின் அவலட்சணம்.. இன்றைக்கு வந்த இன்னொரு செய்தி, CMDA நிறுவனத்தில் 181 தட்டச்சு பணியாளர்களுக்கு இஷ்டப்படி ஒரு தேர்வும் இன்றி பணிநியமனம் செய்திருக்கிறது இந்த கேடுகெட்ட களவாணிகள் அரசு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X