கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (100) | |
Advertisement
சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு
Kerala Governor, Arif Mohammad Khan, Sabarimala, கேரள கவர்னர், ஆரிப் முகமது கான், இருமுடி, சபரிமலை, தரிசனம்

சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.


தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார். நேற்று இரவு சன்னிதானத்தில் தங்கிய கவர்னர், இன்று காலை மாளிகைப்புறம் கோவில் அருகே, சந்தன செடிகளை நட்ட பின், திருவனந்தபுரம் செல்கிறார்.


latest tamil news


கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.ஜ.பி., தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார். கவர்னர் வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம். மண்ணறை வேதனை கண்டிப்பாக இந்த மனிதருக்கு கிடைக்கும். ஆண்டவன் கொடும் நெருப்பில் வைத்து வாட்டுவான். கருணை மிக்க கடவுளை சீண்டி விட்டு விட்டார்கள்.
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
12-ஏப்-202116:46:07 IST Report Abuse
Devan There are so many comments here how muslim going to sabarimalai, its only showi g businesd like. These persons have not gone to malai or they might hsve went as a picnic. in malai or all equal no cadt, religion or rich or poor. Go tbere see from Erumeli to sannidhanam
Rate this:
Cancel
Prabu - Chennai,இந்தியா
12-ஏப்-202116:19:08 IST Report Abuse
Prabu படித்தவுடன் ஆச்சர்யமாகவும் அதே சமயம் மகிழ்ச்சையாகவும் இருந்தது இதை இதை இதைத்தான் எதிர்பார்க்கின்றோம் நம் இந்திய மண்ணில் இங்கு மத வேற்றுமை இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ இது வழிவகுக்கும், ஜெய் ஹிந்த, வாழ்க பாரதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X