பொது செய்தி

இந்தியா

வைரஸை தடுக்கும் மின்னணு ‛இன்குபேட்டர்' கருவி

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில், ஒரு தனியார், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், காற்றில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை தயாரித்து உள்ளது.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த, கே.எஸ்.யு.எம்., எனப்படும், 'கேரள ஸ்டார்ட் அப் மிஷன்' நிறுவனம், கொரோனா வைரஸ், காற்றில் பரவுவதை தடுக்க, ஒரு மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை உருவாக்கி உள்ளது.'ஸ்பீக்கர்' போன்ற


திருவனந்தபுரம்: கேரளாவில், ஒரு தனியார், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், காற்றில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை தயாரித்து உள்ளது.



latest tamil news



கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த, கே.எஸ்.யு.எம்., எனப்படும், 'கேரள ஸ்டார்ட் அப் மிஷன்' நிறுவனம், கொரோனா வைரஸ், காற்றில் பரவுவதை தடுக்க, ஒரு மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை உருவாக்கி உள்ளது.'ஸ்பீக்கர்' போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு, 'வொல்ப் ஏர்மாஸ்க்' என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள இடத்தில், காற்றில் கொரோனா வைரஸ் இருந்தால், அதை தடுக்கும்.இந்த மின்னணு சாதனத்தை, ஆர்.ஜி.சி.பி.,எனப்படும், ராஜிவ் காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.அதில், இந்த கருவி சிறந்த செயல்திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதிபடுத்தப்பட்டது.


latest tamil news


இந்த இன்குபேட்டர் கருவி, 15 நிமிடங்களில், கொரோனா வைரசை, 99 சதவீத அளவிற்கு குறைக்கும் திறன் உடையது.இதை, 'ஆன்' செய்துவிட்டால், 360 டிகிரி சுற்றி, ஒரு நாள் முழுதும் பாதுகாப்பு அரணாக, வைரசை ஊடுருவ விடாமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202109:03:10 IST Report Abuse
G. P. Rajagopalan Raju Well done. 👌👌👌
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
12-ஏப்-202108:24:58 IST Report Abuse
oce இதைத்தான் நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். இப்போது செயல் வடிவம் கிடைத்து விட்டது. தடுப்பூசி மாஸ்க் தேவை இல்லை. மேலும் நடமாடும் மனிதரிடை செல்கள் பயன் படுகின்றன. அந்த செல்களில் மெல்லிய கிருமி நாசினி திரவ அடர்த்தியுடன் செல் எலக்ட்ரான்கள் உமிழும் வெப்பமும் (.செல்கள் எப்போதும் வெப்ப அலைகளுடன் இயங்குபவை ) கலந்து வெளியேறும் வாசனை வீச்சு பயனாளியை சுற்றி சுமார் ஜந்தடி வரை பரவுமாறு வடிவமைக்கலாம். எலக்ட்ரான்களில் இருந்து கிளம்பும் கிருமி நாசினி வெப்ப கசிவு வாசனை காற்றில் பரவும் மாஸையும் வைரஸ்களையும் அழிக்கும்படி செல்களை தயாரிக்க வேண்டும். நூறு பேர் கூடிய இடத்திலும் அவர்களை சுற்றியும் அவர்களிடமுள்ள செல்களே அவர்களுக்கு பாது காப்ப அரணாக அமையும்.
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
12-ஏப்-202107:00:19 IST Report Abuse
vns இதுபோன்ற அபத்தமான செய்திகளை வெளியிடக்கூடாது.
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
12-ஏப்-202113:10:07 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஉங்களுக்கு புரியவில்லை என்றால் அபத்தமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X