பொது செய்தி

இந்தியா

அக்டோபருக்குள் 5 புதிய கொரோனா தடுப்பூசி!

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (4+ 9)
Share
Advertisement
புதுடில்லி: தற்போது, 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே, நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டால், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்' ஆகிய ஐந்து தடுப்பூசிகளின் அவசரகால
Corona Virus, Corona Vaccine, Covid Vaccine, Vaccine

புதுடில்லி: தற்போது, 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே, நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டால், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்' ஆகிய ஐந்து தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



இதில், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கு அடுத்த, 10 நாட்களில் அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ஜூன் மாதம் முதல், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்குள், புதிதாக ஐந்து புதிய தடுப்பூசிகள் சந்தையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
12-ஏப்-202117:44:43 IST Report Abuse
sundarsvpr காரணம் இல்லாமல் காரியம் இல்லை. முதலில் தொற்றுக்கு காரணம் அறியவேண்டும். இப்போது அரசு மக்களுக்கு இரண்டு பணிகள். காரணம் அறியவேண்டும். அதாவது பொதுசுகாதாரம். அடுத்தது எதிர்ப்பு சக்தி கொடுக்காத உணவு வகைகள் குறைதல் இரண்டாவது தடுப்பை மீறிவந்தால் பாதுகாப்பு முறைகள் இதில் அரசு கடுமையை கடைப்பிடக்கவேண்டும் . இதுவும் புரியவில்லை ஏன் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை கொரானா தொடக்கத்தில் இருந்து கூறி மக்களுக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்தவேண்டும்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-ஏப்-202110:54:36 IST Report Abuse
vbs manian முன்பே செய்திருக்க வேண்டும். அமெரிக்கா பண பலத்தால் உலகில் எங்கெல்லாம் ஊசி கிடைக்கிறதோ எல்லாவற்றையும் வாங்கி பதுக்கி விட்டது. இதன் காரணமாக பல ஏழை நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகள் பல ஊசியே இல்லாமல் தவிக்கின்றன.
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
12-ஏப்-202107:37:38 IST Report Abuse
skandh இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகளை விட்டுவிட்டு அந்நிய தடுப்பூசிகளை பயன் படுத்தப் போகிறார்களாம். மக்கள் எப்படி போனால் என்ன? என்னோட குடும்ப சொத்து தான் முக்கியம்.கண்டிக்கிறோம். மோ.... அரசின் இந்த செயலை கண்டிக்கிறோம். இப்படிக்கு இந்தியாவின் சின்ன பப்பு. தமிழ்நாட்டின் சுடலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X