பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்., 15 வரை கோடை மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: குமரி கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. வரும், 15ம் தேதி வரை மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.குமரி கடல் பகுதியில், 2 கி.மீ., உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று

சென்னை: குமரி கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. வரும், 15ம் தேதி வரை மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


குமரி கடல் பகுதியில், 2 கி.மீ., உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, பெரியகுளம் மற்றும் தேனியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. பூதப்பாண்டி, 4; கயத்தாறு, நாகர்கோவில், சாத்தான்குளம், மதுரை விமான நிலையம் 3; பெருஞ்சாணி, கன்னிமார், வாலிநோக்கம், பாம்பன், ஆர்.எஸ்.மங்களம், 2; முதுகுளத்துார், சிவலோகம், குழித்துறை, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news


வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 14, 15ம் தேதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கனமழையும் பெய்யும். சென்னையில் அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஏப்-202100:04:07 IST Report Abuse
Ramesh R மழையே வா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X