பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 17 லட்சம் ‛டோஸ்' கையிருப்பு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 38 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tamilnadu, CovidVaccine, Dose, தமிழகம், கொரோனா, தடுப்பூசி, கையிருப்பு

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 38 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பதால், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்; அதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என, பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இந்திய மருத்துவ சங்கமும், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனால், நான்கு நாட்கள் தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil news



இந்த திருவிழா, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் உட்பட, 5 ஆயிரம் மையங்களில் நேற்று (ஏப்.,11) துவங்கியது. மக்கள் ஆர்வமுடன் சென்று, தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தினமும், இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விழா, 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
பணியாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று, தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‛தமிழகத்தில் தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை; 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
12-ஏப்-202118:26:11 IST Report Abuse
vbs manian எட்டு கோடியில் பாதிக்கு மேல் நாற்பது வயதுக்கு கீழே சிறு குழந்தைகள் இளைஞர்கள். இவர்களுக்கு மருத்துவ உலகம் ஊசி தேவையில்லை என்கிறது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-ஏப்-202120:16:37 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅப்போ இவங்களுக்கு கொரானா வராதுன்னு சொல்லிடுச்சா?...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
12-ஏப்-202116:26:48 IST Report Abuse
Elango எங்கள் ஊரில் பத்து பேரை கூட்டி சென்றால் மட்டுமே தடுப்பூசி போடுகிறார்கள்
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
12-ஏப்-202111:53:10 IST Report Abuse
மன்னிப்பு தினமலர் செய்தியை நல்லா படித்துப் பாருங்கள். கொரோனா வைரஸ் தடுப்பூசியை, 10 கோடி பேருக்கு, குறைந்த நாட்களில் செலுத்தி, இந்தியா சாதனை படைத்துள்ளது. தடுப்பூசி நடவடிக்கை குறித்து, மத்தியசுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, 10 கோடியை கடந்துள்ளது. வெறும், 85 நாட்களில், 10 கோடி பேருக்கு, நாம் தடுப்பூசியை செலுத்தி உள்ளோம்.இதே, 85 நாட்களில், அமெரிக்காவில், 9.2 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சீனாவில், 6.1 கோடி பேருக்கும், பிரிட்டனில், 2.1 கோடி பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டன.அமெரிக்காவில், 89 நாட்களிலும், சீனாவில், 102 நாட்களிலும், 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இவ்வளவு குறைந்த நாட்களில், 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி நாம் சாதனை படைத்து உள்ளோம்.ஒரு நாளுக்கு, 38.93 லட்சம் டோஸ் என்ற சராசரி எண்ணிக்கையில், நம் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாழ்க வளமுடன் .வாழ்க வையகம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X