பொது செய்தி

இந்தியா

வீல் சேரில் அமர்ந்தபடி ஆக்ஸிஜன் ; புரட்டி எடுக்கிறது கொர்.,ரோனா

Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை: இந்தியாவில் அதிகம் 2வது கட்ட கொரோனா பாதிப்பு மஹாராஷ்ட்டிராவில் தான் . இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விர்ரென உயர்ந்து வருகிறது. இதனால் விரைவில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது . மஹாராஷ்ட்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 10

மும்பை: இந்தியாவில் அதிகம் 2வது கட்ட கொரோனா பாதிப்பு மஹாராஷ்ட்டிராவில் தான் . இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விர்ரென உயர்ந்து வருகிறது. இதனால் விரைவில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது .latest tamil news
மஹாராஷ்ட்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 10 ஆயிரம் பேர். நோயாளிகள் அதிகரிப்பால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்குள் ஆளாகி உள்ளனர்.

ஒஸ்மானாபாத் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வீல் சேர் மற்றும் நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.


latest tamil news

முழு ஊரடங்கா ?நிலைமை படுமோசமாகி வருவதால் மாநிலம் முழுவதும் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க சுகாதார துறை அதிகாரிகள் அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அரசு தரப்பில் வரும் புதன்கிழமை ( ஏப்.14)ல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஏப்-202102:35:37 IST Report Abuse
மலரின் மகள் ஒரு தேசத்தில் எது வேண்டுமானாலும் கொலப்ஸ் ஆகலாம் அதை சமாளிக்க முடியும். நீதி நிதி என்று ஏதுவாகிலும் சமாளிக்கலாம். ஆனால் ஹெழ்த் கேர் சிஸ்டம் மட்டும் கொலப்ஸ் ஆக கூடாது. அது ஆவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிகப்படியான திடிரென்று தீர்க்க முடியாத குணப்படுத்த கடினமான வியாதிகள் பெருகுவது தான். அதை அறிந்து தான் உடனடியாக எல்லையை மூடியது, போக்குவரத்தை நிறுத்தியது, அதிக கட்டுப்பாடுகளை விதித்தது என்று உடனைடியாக செய்தது நமது பிரதமர் திரு மோடி அவர்கள். அப்போது அதை பலரும் ஏளனம் செய்தார்கள். இப்போதும் கெஜ்ரிவால் போன்றோர் பொது ஊரடங்கில் நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள். சென்னையில் அதிக படியான கட்டுப்பாடுகள் விதித்தனால் தான் நம்மால் திறம்பட சமாளிக்க முடிந்தது நிலைமையை என்று இப்போது உணர்வார்கள். நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அவரின் எண்ணம் முழுதும் நாட்டு மக்கள் நலனில் தேசன் நலனில் இருக்கிறது என்பதை இப்போது நிறையபேர் புரிந்து கொண்டிருப்பார்கள். மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் தந்து விட்டு நிலைமை சீரடைவதை நோக்கி கொண்டிருக்கிறார். மத்திய அரசு என்ன செய்யவேண்டுமோ அதை திறம்படத்தான் செய்கிறது. இப்பொது அப்படி என்ன செய்து விட்டார் எதற்காக பொது முடக்கம் அறிவிக்கவில்லை, கார்பொரேட் களுக்காக அடக்கி வாசிக்கிறாரா என்றெல்லாம் தூற்றுவோர் வழக்கம் போல இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக ஒன்று பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்தவேண்டியது இருக்கிறது, அதை விட மக்கள் நலன் முக்கியம் அதற்காகத்தான் ரெமிடிசிவர் மருந்துகள் ஏற்றுமதிக்கு உடனடி தடை. அது தேவையான அளவிற்கு உற்பத்திப்பெருக்க உறுதி செய்யப்படுகிறது. அதன் பிறகு ஏற்றுமதிக்கு தடைகள் நீக்கப்படவேண்டும். அடுத்ததாக கொஞ்சம் கவனமாக பார்த்து கொண்டே இருப்பதற்கு காரணம் தடுப்பூசிகள் வந்தாயிற்று. அவைகள் சிறப்பாக செய்லபடுகின்றன. சந்தேகமில்லை. மக்களுக்கு அதன் மீது முழு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக பிரதமரே பரத் பையோடெக் நிறுவன தடுப்பொஸ்ஸியை போட்டு கொண்டு முன்மாதிரியாக இருக்கிறார், அதன் வீரியத்தை தான் பலரும் கேலி செய்தார்கள். அதற்காக அந்த தடுப்பொசியை அனைவரின் முன்பாக செலுத்தி கொண்டார். இப்போது புதிதாக மேலும் மூன்று தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. ஆகையால் நிலைமையை தாராளமாக சமாளிக்கும் நிலைக்கு நமது தேசத்தை வழிநடத்தி இருக்கிறார் என்று அவரை மனதார பாராட்டலாம். நமது பிரதமருக்கு வாழ்த்துக்கள். இந்திய தாயின் தவப்புதல்வனாக வந்தது நமது பெருமை. எனோ தெரியவில்லை ஒரு சிலர் தடுப்பூசிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். சந்தேகம் கிளம்புவதற்கு முன்பு அவர்கள் சந்தேகத்தை அவர்களே நிவர்த்தி செய்து கொண்டு பார்க்கவேண்டும். அவர்கள் சந்தேகம் சரியென்று தெரிந்தால் மட்டுமே அதை பொதுவெளியில் சொல்லவேண்டும். இல்லையென்றால் அரசும் வல்லுநர்கள் சொல்வதை ஏற்கவேண்டும். பிரேசிலில் இன்று நிலைமை மிகவும் எல்லை மீறி போயிருக்கிறது. நாற்பது வயதிற்குட்பட்டவர்கள் அதிகமானவர்கள் ஐ சி யு வில் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு சிகிச்சை சரியாக செய்யமுடியாத நிலையில் தேசம் தடுமாறுகிறது. அங்கு ஹெல்த் கேர் சிஸ்டம் பழுதடைந்து அபாயகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று பல்வேறு ஊடக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவர்களுக்கு நாம் முதலில் உடனடியாக இலவசமாக ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை கொடுத்தோமாதனால் அங்கு மருத்துவ பணியாளர்கள் தைரியமாக வேலை செய்ய முடிகிறது. அமெரிக்க திணறியதும் அதன் பிறகு தடுப்பூசிகளை கடுமையான கட்டுப்பாடுகளால் மட்டுமே மீண்டழுந்து வந்ததும் நாம் கண்முன்னே காண்கிறோம். ஆகையால் தினமலர் சொல்லும் செய்திகளை படிப்போம் பகிர்வோம்,. கொரநா வந்த காலத்திலிருந்தே தொடர்ந்து கரடி கத்தாக கத்தி கொண்டிருக்கிறது. தயவுசெய்து சமூக இடைவெளியை கடை பிடியுங்கள், கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள், முகக்கவசம் முக்கியம் என்று. தேர்தலின் போதும் தொடர்ந்து எச்சரித்து கொண்டே வந்தது. மனம் தளராமல் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே வருகிறது. மிகவும் முக்கியத்துவம் இந்த செய்திக்கு தந்து கொண்டே இருக்கிறது. ஒருநாளும் எச்சரிக்கை தராத செய்திகள் வராமல் இருந்ததே இல்லை எனலாம். தயவு செய்து நாம் செவிமடுப்போம். ஊர் கூடி தேரிழுப்போம். வெற்றி பெறுவோம். ஒரு சமுதாயத்தின் பிரச்சினையை தன்மனிதனால் தீர்க்க முடியாது. மொத்த சமுதாயமும் சேர்ந்தே தான் தீர்க்கவேண்டும். தேவை ஒற்றுமை. நல்லதை ஏற்கும் மனப்பக்குவம். உலக ஜீவராசிகள் அனைத்தையும் ஜெகன் மாதா காக்கட்டும்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
12-ஏப்-202118:35:16 IST Report Abuse
Jayvee கிருத்துவ பாதிரிகளும் தீயமுக அடிமைகளும் மூர்கர்களும் சொல்வது .. கோராணா ஊசி போடாதீர்கள் .. கொரோனா என்ற நோய் இல்லவேயில்லை.. மோடி கார்போரேட்டுகளும் சேர்ந்து கொள்ளையடிக்க போட்ட திட்டம்..
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஏப்-202121:48:31 IST Report Abuse
தல புராணம்மாட்டு சாணத்தில் குளிங்க, சங்கிபாய்ஸ் சொல்றது.....
Rate this:
Cancel
Prabu - Chennai,இந்தியா
12-ஏப்-202116:26:54 IST Report Abuse
Prabu இதன் வீரியம் தெரியாமல் பலரும் அசட்டை செய்கின்றனர், பிறகு அரசை குறை கூறவேண்டியது, இந்தியாவில் எவர் ஒருவர் இறந்தாலும் அது நம்மில் ஒருவரே, எனவே முடிந்த வரை நாம் முதலில் கொரோன விதிகளை கடைபிடிப்போம், முடிந்தால் அடுத்தவர்களுக்கும் இதை நாம் போதிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X