பொது செய்தி

இந்தியா

எங்கள் கோரிக்கையில் சமரசம் செய்ய தயாரில்லை: விவசாய சங்க தலைவர்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும்வரையில் எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 137வது நாளாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித
FarmersProtests, FarmLaws, RakeshTikait, Govt, Demands, விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்கள், டில்லி, ராகேஷ் டிக்கைட்,

புதுடில்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும்வரையில் எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 137வது நாளாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்தார்.


latest tamil news


இந்நிலையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி 22ம் தேதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ, அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் துவங்க தயாராகவுள்ளோம். அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர்.


latest tamil news


மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஏப்-202107:51:26 IST Report Abuse
kulandhai Kannan இந்தப் போராட்டக்காரர்களுக்கு கொரோனா வந்தால் மருத்துவர்கள் வைத்தியம் பார்க்கக் கூடாது.
Rate this:
Cancel
bala - chennai,இந்தியா
13-ஏப்-202106:28:02 IST Report Abuse
bala ஐயா, உங்களுடைய கஷ்டங்கள் பாமரனுக்கு புரியவில்லை. உங்களால் எப்படி இத்தனை மாதமாக போராட்டம் போட முடிகிறது? முதலில் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். மக்கள் இணையா விட்டால் போராட்டம் பயன் பெறாது. சட்டத்தை வாபஸ் செய்தல் மட்டுமே போராட்டம் முடியும் என்றால் பேச்சு வார்த்தை எதற்கு? இன்னும் சில வருடங்கள் அங்கேயே உட்காருங்கள் அடுத்த தேர்தல் வந்துவிடும். ஒட்டு போட்டு ஆட்சி மாற்றிவிட்டு வீட்டுக்கு போகலாம்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202102:57:01 IST Report Abuse
Rajagopal வருடம் 2024. டெல்லி நோக்கி செல்லும் ரோடுகளின் இரண்டு பக்கங்களிலும் எலும்புக்கூடுகள் வரிசையாக இருக்கின்றன. அருகில் பிட்ஜா தயாரிக்கும் இயந்திரங்கள் துருப்பிடித்து இருக்கின்றன. கால்களில் மசாஜ் செய்யும் இயந்திரங்கள் நின்று போய், அவற்றில் கால்களை வைத்துக்கொண்டு எலும்புக்கூடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இவர்கள் மடிந்ததன் காரணம் - எல்லா பணமும் காலியாகி, சாப்பிட எதுவும் இல்லாமல், யாரும் கண்டுகொள்ளாமல், அப்படியே இருந்து சடலங்களாகி விட்டதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X