பொது செய்தி

இந்தியா

அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.இந்தியாவை மையமாக கொண்டுள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன்
Flipkart, AdaniGroup, Partners, Enhance Supply, பிளிப்கார்ட், அதானி குழுமம், சேவை

புதுடில்லி: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவை மையமாக கொண்டுள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேம்படுத்த உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் பொருட்களை விரைந்து டெலிவரி செய்ய இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.


latest tamil newsஇதனால், மும்பையில் 5,34,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் கட்டடம் பிளிப்கார்ட்டின் சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. மேலும், இது 2022 மூன்றாம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும். இங்கு, சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களின் பொருள்களை ஒரேநேரத்தில் இங்கு சேமித்து வைக்க முடியும். இதன் மூலமாக 2,500 பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஏப்-202110:44:00 IST Report Abuse
ஆரூர் ரங் கட்டுமர கட்சி தான் 😎 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க ஆர்வத்துடன் மத்திய காங்கிரஸ் ஆட்சி சட்டத்திற்கு ஒத்துழைத்தது . இப்போ பிலிப்கார்ட்டில் பெருமளவில் அன்னிய பங்குதாரர்கள். ஆனாலும் அதானி பங்குதாரர் இல்லை. பார்சல்களை எடுத்துச் செல்லும் ஒப்பந்தம் மட்டுமே. அதானி நெடுங்காலமாகவே சரக்குப் போக்குவரத்து துறையில் உள்ளவர் என்பதால் ப்ளீப்கார்ட இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. மற்ற பார்சல்களை ஒப்பிடுகையில் இதில் லாபம் குறைவே . (ப்ளீப்கார்ட அமேசான் இன்றுவரை நஷ்டத்தில் தான் இயங்குகிறது )
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
12-ஏப்-202120:12:54 IST Report Abuse
கொக்கி குமாரு திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி ஆரம்பித்து வைத்த தேவையற்ற இலவசங்களால் தமிழகத்தின் இப்போதைய கடன் 5 லட்சம் கோடிகளை நெருங்குகிறது. இது இப்படியே சென்றால் எதிர்காலத்தில் தமிழகம் திவாலாகி இங்கு இருக்கும் இளைஞர் கூட்டம் வட இந்தியாவை நோக்கி வடை சுட்டு விற்கவும், டீ கடை நடத்தவும் ஓட்டம் பிடிப்பார்கள். அப்போது அவர்களால் சென்னையை தாண்டி கூட ஹிந்தி தெரியாமல் செல்ல முடியாது. அப்போது தெரியும் வட இந்தியன் இங்கு வந்து பாணி பூரி விற்கிறான், பேல் பூரி விற்கிறான், பாக்கு போட்டு கொண்டு பீடா வாயனாக திரிகிறான் என்றெல்லாம் நாம் கிண்டலடித்ததின் கர்மா வலி. தமிழகத்தின் எந்த ஒரு பிரச்சனைகளை தொட்டாலும் அது கட்டு மரம் கருணாநிதியிடம் சென்று முடிவடைகிறது. திருட்டு திமுக. தமிழகத்தின் 50 வருட சாபம். எப்போது மக்கி மண்ணோடு மண்ணாகுமோ தெரியவில்லை.
Rate this:
TechT - Bangalore,இந்தியா
13-ஏப்-202103:48:07 IST Report Abuse
TechTஎதாவது சம்பந்தம் இருக்கா ???...
Rate this:
Ketheesh Waran - Bangalore,இந்தியா
13-ஏப்-202106:50:08 IST Report Abuse
Ketheesh Waranஇந்த செய்திக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ? அதிமுகவும் நாட்டை இலவசங்களால் சீரழித்துவிட்டது அது மட்டுமில்லாமல் அதிமுக ஒரு ஊழல் சம்பிரட்சியாம்...
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
12-ஏப்-202119:58:20 IST Report Abuse
VELAN S அதானி பரம்பரை பணக்காரன், அவன் உழைக்க மாட்டான் , பிளிப்கார்ட் பய , உழைத்து முன்னேறிய பய , இவனுக ரெண்டு பேருக்கும் ஜாதகம் ஒத்து போகுமா , எனக்கு சந்தேகம் வருது , உழைக்கிற பிளிப்கார்ட் ஏமாறாம இருந்தா சரி .
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஏப்-202121:59:07 IST Report Abuse
தல புராணம்பரம்பரை பணக்காரனா ?? மோடி இல்லாட்டி எங்கேயாவது நண்டு பிடிச்சிக்கிட்டு இருந்திருப்பானுங்க.. எல்ல்லாம் ஐயா மோடி போட்ட கொடை .. அள்ளிக்கொடுத்த வள்ளல் மோடி ஐயா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X