நாளுக்கு நாள் அதிகரிக்கும் மம்தாவின் கோபம்: மோடி பேச்சு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பர்தாமன்: நாளுக்கு நாள் மம்தாவின் கோபம் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் பர்தாமன் பகுதியில் பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்பார். மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்.
WestBengalElections, PMModi, Mamata, Abuse, பிரதமர், மோடி, மேற்குவங்கம், மம்தா

பர்தாமன்: நாளுக்கு நாள் மம்தாவின் கோபம் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பர்தாமன் பகுதியில் பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்பார். மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார். திரிணமுல் கட்சியினர் தலீத்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுகின்றனர். மம்தாவின் விருப்பம் இல்லாமல், அவரது கட்சியினர் இத்தகைய கருத்துகளை கூற முடியாது.


latest tamil news



மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால், நான் இங்கே தான் இருக்கிறேன். உங்கள் விருப்பம் போல் என்னை துஷ்பிரயோகம் செய்யுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். மம்தாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறும் 4 கட்ட தேர்தலின் வாக்குப்பதிவுகளில் திரிணமுல் காங்., கட்சியை மக்கள் அகற்றிவிட்டனர். கூச் பிகாரில் நடந்த வன்முறைக்கு பின்னால் மம்தா உள்ளார்.


latest tamil news



அனைத்து நன்மைகளும் கிடைக்க இரட்டை இன்ஜீன் கொண்ட அரசு அதிகாரத்திற்கு வரவேண்டும். தேர்தலில் அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்திற்கு வந்த துணிச்சலான போலீஸ் அதிகாரி அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கண்டதும், அவரது தாயாரும் இறந்துவிட்டார். மம்தா அவர்களே, அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு ஒரு தாய் இல்லையா? நீங்கள் எவ்வளவு கடுமையான மற்றும் இரக்கமற்றவர் என்பதை இங்குள்ள எந்த ஒரு தாய்க்கும் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
13-ஏப்-202112:34:10 IST Report Abuse
Tamilachi மம்தா பேகம்....இந்துக்களை ஒடுக்கிகொண்டே அவர்களை காப்பது போல் நாடகமாடுகிறார்...
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
12-ஏப்-202123:45:06 IST Report Abuse
Aarkay சொர்ணாக்கா ஆட்டம் வெகுவிரைவில் க்ளோஸ்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
12-ஏப்-202122:02:06 IST Report Abuse
Sivaraman சகோதரி உங்கள் சாயம் வெளுத்துவிட்டது . நிர்வாகத் திறமை இன்றைய சமுதாயத்தின் தேவை மேற்குவங்காளம் மிகவும் பின்னோக்கி செல்லுகிறதே . வீண் பேச்சு இனி பயன் தராது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X