பொது செய்தி

இந்தியா

தனக்கு பிறகு தானே தானம் - தடுப்பூசி விவகாரம் டிரெண்டிங்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு மந்தமாக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கொடுங்கள் என்ற முழக்கம் டுவிட்டரில் #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக்கில் இன்று(ஏப்., 12) டிரெண்ட் ஆகிறது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டை
SpeakUpForVaccinesForAll, Corona, Covidvaccine, Coronaindia,

புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு மந்தமாக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கொடுங்கள் என்ற முழக்கம் டுவிட்டரில் #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக்கில் இன்று(ஏப்., 12) டிரெண்ட் ஆகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டை ஒப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 1.30 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்நோயால் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், ஊரடங்கு போன்ற விஷயங்களையும் சில மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளன. அதேப்போன்று கொரோனாவுக்கான தடுப்பூசி பணியும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், மந்தமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன. குறிப்பாக நாட்டில் அதிகமாக கொரோனா பரவி உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி மிக குறைந்த விகிதத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியது.


latest tamil newsஇந்நிலையில் காங்கிரஸ் கட்சி, முதலில் நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கிவிட்டு, பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுங்கள். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்கின்றனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் #SpeakUpForVaccinesForAll என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் இன்று டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சில கருத்துக்களை இங்கு பார்ப்போம்...

* கொரோனா நோய் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதுவரை மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.

* முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நம்மை கையேந்தும் நிலைக்கு உட்படுத்தினார்கள். இரண்டாவது ஜிஎஸ்டி மூலம் கையேந்த வைத்தார்கள். மூன்றாவது ஊரடங்கால் அனைவரையும் வீட்டில் உட்கார வைத்து கையேந்த வைத்தார்கள். இப்போது தடுப்பூசிக்காக கையேந்த வைக்கிறார்கள்.

* கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு இந்தியனும் போராட உரிமை உண்டு. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்துங்கள்.


latest tamil news* உலகில் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்பது அனைவரும் அறிந்தது. நம் நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்காமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது வருத்தமான விஷயம். தனக்கு போதும் என்ற பின்பு தான் பிறருக்கு தானம் என்பதை மறந்துவிடக்கூடாது.

* கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது, ஆனால் இந்த அரசாங்கம் அதன் தீவிரத்தை புறக்கணித்து, மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மோடி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

* கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கி தவிக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் பாதிப்பு அதிகம். இந்தியா 6.4 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே மற்ற நாட்டினருக்கு ஏற்றுமதி செய்யாமல் தங்கள் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் இந்தியாவில்....?

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
13-ஏப்-202108:43:07 IST Report Abuse
Bala Murugan மக்களைக் குருடர்களாக நினைத்து செவிடாக இருக்கும் மத்திய அரசு. யார் சொல்வதையும் கேட்காமல் சுய லாபத்துக்காக இந்திய தயாரிப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது. இந்தியாவில் நூறு கோடியை தாண்டிய மக்கள் தொகை. வீண் பழி வேண்டாம்.
Rate this:
Cancel
12-ஏப்-202121:49:40 IST Report Abuse
theruvasagan முதலில் அறைகுறையா டெஸ்ட் பண்ண மருந்தை எங்களுக்குப் போட்டு சாவடிக்கப் பாக்கறீங்களான்னு சொன்னானுங்க. அதுக்கப்புறம் மருந்து வீணாப்போயிடும் என்பதற்காக கொரோனா ஜாஸ்தியாகிவிட்டது என்ற புரளிய கிளப்பிவிடுறாங்க அப்படீன்னும் பேசினானுக. சமீப காலமா ஊசி போட்டாலும் கொரானா தாக்காது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அதனால போட்டுக்கறதும் போடாத இருக்கறதும் ஒண்ணுதான்னு புதுசா ஒரு வியாக்கியானம் கண்டு புடிச்சசானுங்க. இப்படி புரளி பேசி பேசியே ஜனங்களிடம் பீதியை கிளப்பிவிட்டு வாய்க்குவந்த மாதிரி பேசின நாறவாய் அத்தனையும் ரெண்டாவது அலையின் ஆக்ரோஷத்தை பாத்து வெவெலத்துப்போய் இப்ப ஊசி வேணும் ஊசி வேணும்ன்னு கதற ஆரம்பிச்சுட்டானுக. இதுமாதிரி எல்லா நல்ல விஷயங்களிலும் எதிர்மறையாக பேசிப்பேசியே நாட்டையும் மக்களையும் உருப்படாமல் ஆக்குவதுதான் இவர்களோட குறிக்கோள். லட்சியம்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
12-ஏப்-202119:09:39 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இதெல்லாம் அபாண்டம் என்று ஹாஷ்டாக் போட்டவனுக்கும் தெரியும் இங்கே எதயாவது சொல்லவேண்டும் என்று கருத்து போடும் அல்லக்கைகளுக்கும் நல்லாவே தெரியும்..வாங்குற காசுக்கு கூவுறானுங்க..
Rate this:
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
12-ஏப்-202121:43:31 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது.ஏண்டா அலறுகிற உன்னை பற்றி வந்தால் அபாண்டம் போ படிச்சவன் தானே நீ அப்புறம் கைநாட்டு என்றால் உனக்கு விளக்கலாம் , ஊருக்கே உன் பொய்சி தெரியுது அப்புறம் என்ன , சின்ன பயன் எல்லாம் TWITEER இல் கழுவி கழுவி காய வைக்கிறான்...
Rate this:
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
12-ஏப்-202121:45:16 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிதுநீ எல்லாரையும் கேட்பியே வழக்கு போடு என்று இது பற்றி வழக்கு போடு அப்போ இன்னும் நாறி போய்விடும் , நீ UP MP என்றால் அதிகம் கொடுப்ப எதிர்கட்சி ரோலிங் என்றால் குறைத்து கொடுப்ப...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X