பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல்: ரூ.2.77 கோடி அபராதம் வசூல்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ. 2.77 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், மீறுவோர் மீது
கொரோனா, விதிமுறை, அபராதம், வழக்கு, போலீஸ்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ. 2.77 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் போலீஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.


latest tamil news


இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான 4 நாட்களில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் என 1.36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டும் ரூ.2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
12-ஏப்-202123:48:44 IST Report Abuse
Aarkay சென்னையில் இதெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. யாருமே இங்கே ஹெல்மெட் போடுவதே இல்லை. குல்லா போட்டால் ஹெல்மெட் போடா தேவையில்லை இங்கே. கரோனா காலத்தில் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கா? அரசு பேருந்துகளில் standees கூட்டம் நிரம்பி வழிகிறது. எல்லோரும், கழுத்திற்கு மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
12-ஏப்-202121:01:27 IST Report Abuse
sahayadhas நீங்க, Gim கட்ட , புதிய flight ல போக, சொகுசு வாழ்க்கை வாழ ெகாரோனல பரவா இல்லனு ஒட்டு போட கூட்டுட்டு போரீங்க. முடிந்ததும் குனிய வச்சு குத்து ரீங்க. இந்த வசூல் எந்த கட்சினருக்கு விலக்கு. புரியுதா ஜனங்களே . நம்ப பணம் அவீங்க ளுக்கு தேவை.
Rate this:
Cancel
selva -  ( Posted via: Dinamalar Android App )
12-ஏப்-202118:31:19 IST Report Abuse
selva தேர்தலுக்கு முதல் நாள் இரவு கொடுத்த பணத்தை தேர்தல் முடிந்த உடனேயே இப்படி திரும்ப வசூலிப்பது அநியாயம். பாவம் மக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X