கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம்: எடியூரப்பா எச்சரிக்கை

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் விதிகளை பின்பற்றவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.இதுதொடர்பாக எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளைப் பின்பற்ற வேண்டும். செவிசாய்க்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள
Karnataka, Lockdown, Yediyurappa, எடியூரப்பா, பொதுமுடக்கம், ஊரடங்கு, கர்நாடகா

பெங்களூரு: கர்நாடகாவில் விதிகளை பின்பற்றவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளைப் பின்பற்ற வேண்டும். செவிசாய்க்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும். அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு மாவட்டத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளி போன்றவை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இதைப் பின்பற்றி எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமுடக்கம் அறிவிக்க அரசு தாயாராக இல்லை. மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தந்தால் கொரோனா வைரசின் இரண்டாவது அலையிலிருந்து கட்டாயம் மீண்டு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202107:44:43 IST Report Abuse
Raj போட்டோவில் mask மற்றும் சமூக இடைவெளி எங்கே? வூருக்குத்தான் உபதேசம்.
Rate this:
Cancel
13-ஏப்-202107:30:06 IST Report Abuse
ஆப்பு தேவைப்பட்டால் என்ன? நிச்சயம் பொதுமுடக்கம் வரும். இந்தியா முழுவதும்... சௌக்கிதார் அறிவிப்பாரு...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஏப்-202119:58:11 IST Report Abuse
Ramesh Sargam "தேவைப்பட்டால்?" அப்படி என்றால் இவருக்கு மாநிலத்தில் கொரானா தாக்கம் என்னவென்று தெரியாதா? இல்லை, தேவையில்லை என்று நினைக்கிறாரா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X