பொது செய்தி

இந்தியா

‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி
SputnikV, CovidVaccine, India, Recommendation, Russia, ரஷ்யா, ஸ்புட்னிக் வி, கொரோனா, தடுப்பூசி, இந்தியா, ஒப்புதல், பரிந்துரை

புதுடில்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால தேவைக்காக மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக நிபுணர் குழு கூடியது. அதில், தற்போது ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.


latest tamil news


இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும். இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உலகிலேயே முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6 சதவீதம் செயல் திறன் கொண்டதாகும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202118:28:49 IST Report Abuse
ஆப்பு சீன தடுப்பூசி தான் தீர்வாக இருக்கும். அவிங்கதான் கொரோனா வைரசை பரப்புனாங்க. மருந்தும் அவிங்கதான் வெச்சிருப்பாங்க. சீப்பாவும் குடுப்பாங்க. நான் சீன அடிமையுமில்லை. சீன அதிபர் ஜிங் ஜிங்கோட குத்தாட்டம் போட்டவனும் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X