பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 12, 2021
Share
Advertisement
ஏப்., 13, 1930தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில், 1930 ஏப்., 13ம் தேதி பிறந்தவர், கல்யாணசுந்தரம். திண்ணைப் பள்ளிக்கூடத்தில், இரண்டாம் வகுப்பு வரை படித்தார்.விவசாயம், உப்பளம், நாடகம், இட்லி கடை என, 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டார்.சிறு வயதிலேயே, கிராமிய மணம் கமழும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது


இதே நாளில் அன்று


ஏப்., 13, 1930



தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில், 1930 ஏப்., 13ம் தேதி பிறந்தவர், கல்யாணசுந்தரம். திண்ணைப் பள்ளிக்கூடத்தில், இரண்டாம் வகுப்பு வரை படித்தார்.விவசாயம், உப்பளம், நாடகம், இட்லி கடை என, 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டார்.சிறு வயதிலேயே, கிராமிய மணம் கமழும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்கள், 'ஜனசக்தி' பத்திரிகையில் வெளியானது. பொதுவுடைமை கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். பாண்டிச்சேரி சென்று, பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். அவர் நடத்திய, 'குயில்' இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1955ல், படித்த பெண் படத்தில், முதன்முதலாக பாடல் எழுதினார். அதைத் தொடர்ந்து, 'சின்னப் பயலே சின்னப் பயலே, துாங்காதே தம்பி துாங்காதே...' உள்ளிட்ட, 180 பாடல்கள் எழுதினார். இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 1959 அக்., 8ம் தேதி, தன், 29வது வயதில் காலமானார்.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X