காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலை தான் மம்தாவுக்கு: மோடி எச்சரிக்கை

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (18+ 26)
Share
Advertisement
பர்தமான் :''மேற்கு வங்கத்தில், காங்., மற்றும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது, முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கு தெரியும். அதுபோன்ற நிலைதான், அவருக்கும் ஏற்பட உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மேற்கு வங்க சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில்,
WB elections 2021, Mamata Banerjee, PM Modi,,மம்தா, மோடி, எச்சரிக்கை

பர்தமான் :''மேற்கு வங்கத்தில், காங்., மற்றும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது, முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கு தெரியும். அதுபோன்ற நிலைதான், அவருக்கும் ஏற்பட உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பர்தமான், கல்யாணி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்த பிரசார கூட்டங்களில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தும்படி, மம்தா தூண்டிவிட்டுள்ளார். ஆனால், நான்கு கட்ட தேர்தலில், மக்கள், சிக்சராக அடித்து நொறுக்கியுள்ளனர். ஏற்கனவே, பா.ஜ., சதம் அடித்து விட்டது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தாவை, வாக்காளர்கள், 'கிளீன் போல்டு' செய்துவிட்டனர். நான்கு கட்டங்களிலேயே, அவரது ஆட்டம் பாதிக்கு மேல் முடிவுக்கு வந்துவிட்டது. தன் அமைச்சர்களுடன், அவர் வெளியேற உள்ளார்.

மம்தாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு வேட்பாளர், எஸ்.சி., மக்களை பிச்சைக்காரர்கள் என கூறியுள்ளார். ஆனால் மம்தா, அதற்கு வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. கடந்த, 10 ஆண்டுகளாக, எஸ்.சி., மக்கள், ஏழை மக்களை ஏமாற்றி வந்தவர், தற்போது அவதுாறுகூறியுள்ளார்.


கூச்பெஹரில், பாதுகாப்புப் படையினர் மீது நடந்துள்ள தாக்குதல் மற்றும் வன்முறை, ஒரு சதி திட்டத்தின் எதிரொலியே. ஜனநாயகத்தில், வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், மக்களின் உரிமைகளை பறிக்க அனுமதிக்க முடியாது.காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இனி, மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது மம்தாவுக்கு தெரியும். அதுபோல தான், அவரது நிலையும் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


மம்தா ஆவேசம்


கூச்பெஹரில் நடந்த வன்முறை குறித்து கருத்து கூறிய, மேற்கு வங்கத்தை சேர்ந்த, பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள், 'சட்டத்தை கையில் எடுக்க முயன்றால், பணி செய்ய விடாமல் தடுத்தால், கூச்பெஹர் போல் மேலும் பல சம்பவங்கள் நடக்கும். உயிர் பலியும் அதிகமாகும்' என, கூறியிருந்தனர்.

ரனாகட் பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், இது குறித்து, மம்தா கூறியதாவது: இவர்கள் என்ன மாதிரி மனிதர்கள்? ஓட்டு போட வருபவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும், அதிகமானோர் கொல்லப்படுவர் என எச்சரிக்கின்றனர். தங்கள் சொந்த கட்சியை சேர்ந்தவர்களை கொலை செய்து, திரிணமுல் காங்., மீது பா.ஜ., பழிபோடுகிறது. இதுபோன்ற தலைவர்கள், அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-ஏப்-202121:14:45 IST Report Abuse
Vijay D Ratnam வெஸ்ட் பெங்காலை ஓர்ஸ்ட் பெங்காலாக்கி வைத்திருக்கிறார் அக்காயி. வரும் மே 2 ந்தேதிக்கு பொறவு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் கூட்டு ஒப்பாரியை கேட்கலாம். மேற்கு வங்கத்தில் காங்கிரசை ஜோதிபாசு ஒழித்துக்கட்டினார். கம்யூனிஸ்டை மம்தா பானர்ஜி ஒழித்துக்கட்டினார். இப்போது திரிணாமுல் காங்கிரஸை மோடி ஒழித்துக்கட்டுகிறார்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
13-ஏப்-202114:21:25 IST Report Abuse
konanki 20,000 கோடி ரூபாய் அயல் நாடுகளில் இருந்து மத மாற்றத்திற்கு கொட்டிய பணம் FCRA சட்டத்தினால் 200 கோடிக்கும் குறைந்தது. வயத்திலே அடிச்சிட்டாங்க எங்கங்க ஜபம் பண்ண போறது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
13-ஏப்-202114:16:53 IST Report Abuse
konanki /ஜெபம் பண்ண போகலே// கடந்த 6 வருடமாக 24 மணி நேரமும் நாளும் பொழுதும் ஓரெ ஜெபம் தான் இந்தியா ஒழிக இந்தியர்கள் ஒழிக மோடி ஒழிக பாஜக ஒழிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X