அனைவருக்கும் தடுப்பூசி உச்ச நீதிமன்றத்தில் மனு!

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், கடந்த, 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசியல் செயற்பாட்டாளரான தெஹ்சின் பூனாவாலா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்
தடுப்பூசி, உச்ச நீதிமன்றம், மனு!

புதுடில்லி: அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், கடந்த, 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசியல் செயற்பாட்டாளரான தெஹ்சின் பூனாவாலா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


latest tamil newsஅதன் விபரம்:

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட, அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக, சுவாசக் கோளாறு உள்ளவர்கள், நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட இளம் வயதினர், கொரோனா தொற்றால் எளிதில் தாக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பது இன்றைய காலகட்டத்தின் அவசியம்
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
13-ஏப்-202110:38:24 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN நமது நாட்டின் பார்லிமென்ட்டை கலைத்து விட்டு ஆட்சி பொறுப்பை சுப்ரீம் கோர்ட்டிடமே விட்டு விடலாம். சுப்ரீம் கோர்ட்டும் ஹைகோர்ட்டுமே அரசாட்சி செய்யட்டும். தொட்டதுக்கெல்லாம் வழக்கு போட்டு கோர்ட் நேரமும் அரசின் நேரமும் வீணகாமல் ஆவது இருக்கும். இங்கு திமுக & கோ தொட்டதுக்கெல்லாம் வழக்கு போட்டு அரசின் நேரத்தை வீணடித்தது கடந்த 10 வருடங்களாக. டெல்லியில் காங்கிரஸ் & கோ வழக்கு தொடுத்து அரசின் செயல்பாடுகளை முடக்குகிறது அல்லது தாமதப்படுத்துகிறது. ஆகவே இதற்கு பதிலாக கோர்டாரிடமே ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டால் நல்லது தானே. திமுக காங்கிரஸ் ஜெயித்து வந்தால் மட்டும் அவர்கள் ஆட்சி செய்து விட்டு போகட்டும். பாஜக ஒருபோதும் இது போன்ற முட்டாள் தனமான செயலை செய்யாது. வழக்கு போட்டு திட்டங்களை தாமதப்படுத்தாது. இத்துனை இன்னல்களுக்கு இடையிலும் பாஜக அரசு காங்கிரஸ் 60 வருடங்களாக முடிக்காமல் விட்ட அனைத்து திட்டங்களையும் முடித்து வைத்துள்ளனர்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஏப்-202109:03:01 IST Report Abuse
M  Ramachandran அவசர குடுக்கை கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அரசுக்கு எதிராக என்ன செய்வது என்று அஞ்சு நட்சத்திரட் ஹோட்டலில் ரூம் போட்டு யோசிப்பார்கள்.எப்படியாவது அரசு செயல்களை முடக்கி அயல் நாட்டிற்கு தங்கள் விசுவாசத்தை காட்டுவார்கள்.
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
13-ஏப்-202105:48:09 IST Report Abuse
Bharathi இது விளம்பரத்துக்காக போடப்படும் வெட்டி வழக்கு. அரசு எவ்வளவோ விளம்பரப்படுத்தியோ வல்லுநர்கள் கருத்தை விளம்பரப்படுத்தினாலும் மக்கள் சுணக்கம் காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு சென்னை வளசரவாக்கம் மார்ச் இரண்டாம் வார நிலவரப்படி சராசரியாக ஒரு நாளைக்கு வெறும் முப்பது பேர் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஒரு மருத்துவமனை ஊழியர் சொன்னார். வல்லுநர்கள் சொல்றதை கேட்காமல் வாட்சாப்பில வர்றத நம்பற வரைக்கும் இப்படி தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X