ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலா? 2 வாரத்துக்கு பின் விசாரணை!

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புதிய தகவல் வெளியானது தொடர்பான வழக்கை, இரண்டு வாரங்களுக்குப் பின் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும், ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016ல், மத்திய அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது, இதில்
Rafale jet deal, Rafale, SC, PIL, ரபேல் ஒப்பந்தம், ஊழல்,  விசாரணை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புதிய தகவல் வெளியானது தொடர்பான வழக்கை, இரண்டு வாரங்களுக்குப் பின் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும், ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016ல், மத்திய அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது, இதில் முறைகேடு நடந்ததாக, காங்., தொடர்ந்து புகார் கூறியது. ஆனால், 'முறைகேடு ஏதும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த, இடைத் தரகர் சுஷான் குப்தாவுக்கு பண பரிமாற்றம் செய்ததில் மோசடி நடந்துள்ளதாக, பிரான்ஸ் லஞ்ச தடுப்பு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதாக, காங்., மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில், தனிப்பட்ட விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதை, இரண்டு வாரங்களுக்குப் பின் விசாரிப்பதாக, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, நேற்று தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-ஏப்-202122:37:01 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ்கரன் சவ்லா , உஜ்ஜல் சிங்க் போன்றவர்களுக்கு பதவிகொடுத்து கவுரவ படுத்தினார்களே அதுமாதிரியா காங்கிரஸ் அல்லக்கைகள் இதையெல்லாம் வசதியா மறந்துடுவானுங்க .
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
13-ஏப்-202117:49:29 IST Report Abuse
K.n. Dhasarathan எந்த அரசும் வெளிப்படையான டெண்டரை ஏன் நடத்துவதில்லை ? இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது மிக கேவமாக இருக்கிறது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
13-ஏப்-202113:15:00 IST Report Abuse
sahayadhas madam france கு போகலயா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-202113:31:52 IST Report Abuse
தமிழவேல் போகாத தேவை இல்லை. வழக்கையே போட்டு மூடிட்டானுவோ.....
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
13-ஏப்-202114:03:34 IST Report Abuse
Srinivas///madam france கு போகலயா?/// போனால் மக்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிடும். இப்போதைக்கு போகாமல் இருப்பது நல்லதாக இருக்குமாம். பெரிய பிரச்சினையாக வந்தால் அவர்களை விட்டே ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டால் எல்லாம் சரியாகி பூசி மெழுகிவிடலாம் என்று ஏற்பாடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X