பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
வின்ட்சர்: பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்துவரும் ஹாரி, தற்போது தாத்தா பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ளார்.அமெரிக்காவில் குடியேற்றம்கடந்த ஆண்டு பிரிட்டன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகியோர்

வின்ட்சர்: பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்துவரும் ஹாரி, தற்போது தாத்தா பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ளார்.latest tamil news
அமெரிக்காவில் குடியேற்றம்


கடந்த ஆண்டு பிரிட்டன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகியோர் குழந்தை ஆர்ச்சியுடன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். அங்கு தொழில் செய்து வந்த அவர்கள், சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய கருத்து பிரிட்டன் அரச குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தில் மேகன் மார்கலிடம் இனப்பாகுபாடு கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர், மேகனுக்குப் பிறக்கும் குழந்தையின் நிறத்தை விமர்சித்ததாக அவர்கள் கூறினர்.

இது பிரிட்டன் அரசு குடும்பத்தின்மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடும் அதிருப்தி அடைந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஹரி- மேகன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அரச குடும்பத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்துப் பேசிய ஹாரியின் மூத்த சகோதரர் வில்லியம், அரச குடும்பத்தில் யாரும் கருப்பின மக்களிடம் பாகுபாடு காட்டுவது இல்லை என்று கூறினார்.


பிரிட்டனில் ஹாரிஇவ்வாறாக ஹரிக்கும் அரச குடும்பத்திற்கும் தொடர் மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில் ஹரியின் தாத்தா பிலிப் தனது 99வது வயதில் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்துக்கு பிரிட்டன் அரசு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த ஊர்வலத்தில் பங்கேற்க தற்போது விமானம் மூலமாக அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு ஹாரி வந்துள்ளார்.


latest tamil newsகொரோனா தாக்கத்தின் காரணமாக தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஹாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வார் என செய்தி வெளியாகியுள்ளது. அவரது மனைவி, மகன், மகள் தற்போது இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இருப்பதால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
13-ஏப்-202111:41:04 IST Report Abuse
Dr. Suriya தாத்தா மாதிரி அப்படியே திரு ஹாரியின் முகசாடை .....தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே ... அது தான் இதுவா ....
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
13-ஏப்-202110:41:24 IST Report Abuse
ponssasi பகையாளியாக இருந்தாலும் இறுதி சடங்கில் கலந்துகொள்ளுவது நமது மரபு. குடும்ப பகை காரணமாக திருமண விழாவை புறக்கணித்தாலும், ஒரு உந்துதலில் இறுதி சடங்கில் தவறாது கலந்துகொள்ளுகிறோம், சில முறிந்துபோன உறவுகள் கூட இதில் இணைந்ததுண்டு. உலகை ஆண்ட அரச குடும்பம் மீண்டும் இணைந்து, அரச குடும்ப பெருமையை மீட்டேடுக்கவேண்டும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஏப்-202115:59:56 IST Report Abuse
Sanny நல்ல பதிவு bro, நம்ம எப்படியும் நமக்கு தெறித்தவர் இறந்தால் ஒரு தடவையாவது அவரின் முகத்தை பார்க்க ஆவலிபோடுவோம். ஆனால் ஹரி தந்து தாத்தாவை பார்க்கவந்தது வெள்ளையர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும், என்ன அவங்க தங்கள் பெற்றோர் இறந்தபின் அவர்களை தந்தையர் தினம், அன்னையர் தினத்திலே தான் சுடுகாட்டில் அவர்களின் கல்லறையில் மலர் வைத்து வணங்குவாங்க....
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
13-ஏப்-202109:30:13 IST Report Abuse
Ramanathan Muthiah சினிமா காரர்களை கல்யாணம் செய்தால் இது தான் நிலைமை முதலில் எட்டாம் ஜார்ஜ் மன்னர் + வாலிஸ் சிம்ஸ்சன் இப்பொது இளவரசர் ஹாரி + மேகன் தம்பதியர். எனக்கு தெரிந்த வரைக்கும் இது ரெம்போ நாள் தாக்கு பிடிக்கும் என்று தோணவில்லை கூடிய சீக்கிரம் இளவரசர் ஹாரி தன் பிள்ளைகளுடன் மீண்டும் இங்கிலாந்து வந்துவிடுவார் என்றே தோன்கிறது அரச வாழ்க்கை என்றால் என்ன சும்மாவா ? நம் ஊர் பட்டது அரசர் "சுடலை" கான் மற்றும் பட்டது இளவரசர் " உதவானிதி சின்ன சுடலை" கான் மற்றும் அவரது மகன் எதிர்கால பட்டது இளவரசர் "இன்ப நிதி " சுடலை கான் & மத்திய அரசர் "பப்பு" கான் போன்ற எண்ணற்ற அரசியல் அரசர்கள் நம் ஊரில் நாக்கை தொங்கப்போட்டு அலைவது போல ...ஐவரும் ஒரு நாள் தன பதவி சுகதிர்காரக மீண்டும் அரசு வாழ்க்கையை ஏற்பார்
Rate this:
G.Shiv - chennai,இந்தியா
15-ஏப்-202108:53:09 IST Report Abuse
G.Shivநீங்க பகோடா ஷாவை மறந்து விட்டீர்கள் போல ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X