அரசியல் செய்தி

தமிழ்நாடு

184 தொகுதிகளில் பெண்கள் அதிக ஓட்டு: கட்சிகள் பதைபதைப்பு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால், அவர்கள் ஓட்டு யாருக்கு சாதகமாக இருக்கும் என தெரியாமல், அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில், 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தல், 6ம் தேதி நிறைவடைந்தது.தேர்தலில், 4.57 கோடி
TN election, Tamil Nadu elections 2021, ladies vote, 184 தொகுதிகள்,பெண்கள்,அதிக ஓட்டு,கட்சிகள், பதைபதைப்பு

சென்னை: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால், அவர்கள் ஓட்டு யாருக்கு சாதகமாக இருக்கும் என தெரியாமல், அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
தமிழகத்தில், 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தல், 6ம் தேதி நிறைவடைந்தது.தேர்தலில், 4.57 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இவர்களில், 2.26 கோடி பேர் ஆண்கள்; 2.31 கோடி பேர் பெண்கள்; 1,419 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

இந்த தேர்தலில், ஆண்களை விட, 5.68 லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர். மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக உள்ளனர்.


latest tamil news




latest tamil news



இதேபோல, 2019ல் வேலுார் தவிர, 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல் தேர்தல் நடந்தது. அப்போது, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் மட்டும், பெண்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிகம். மற்ற தொகுதிகள் அனைத்திலும், பெண் வாக்காளர்களே அதிகம்.ஓட்டுப்பதிவின்படி, திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், திருப்பூர், கோவை ஆகிய தொகுதிகளில், பெண்களை விட, ஆண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர்.

மீதமுள்ள, 26 தொகுதிகளில், பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஆண்களை விட, 5.69 லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்தனர்.இடைத்தேர்தல் நடந்த, 18 சட்டசபை தொகுதிகளில், ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சாத்துார் தொகுதிகளில் மட்டும், ஆண் வாக்காளர்கள் அதிகம். தேர்தலில், பூந்தமல்லி, பெரம்பூர், சோளிங்கர், ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஆகிய தொகுதிகளில் மட்டும், ஆண் வாக்காளர்கள் அதிகம் ஓட்டளித்திருந்தனர்.

மீதமிருந்த, 13 தொகுதிகளில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் ஓட்டளித்தனர். அந்த தேர்தலில், லோக்சபா தொகுதிகள், தி.மு.க.,வுக்கு சாதகமாகவும், இடைத்தேர்தல் தொகுதிகள், அ.தி.மு.க.,வுக்கும் சாதகமாகவும் அமைந்தன.

அதேபோல், இம்முறை சட்டசபை பொதுத் தேர்தலில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர். அவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், அவர்கள் ஓட்டு, எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியாமல், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கலக்கத்தில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-ஏப்-202121:40:19 IST Report Abuse
Vijay D Ratnam அப்போ சுடலைக்கு ஐம்பதுதான் தேறுமா.
Rate this:
Cancel
elangovan - Chennai,இந்தியா
13-ஏப்-202118:55:59 IST Report Abuse
elangovan மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 73.13% மற்றும் பெண்கள் 72.41% பேர் வாக்களித்துள்ளனர். எனவே ஆண்களைவிட குறைவான எண்ணிக்கையில்தான் வாக்களித்துள்ளனர். இதை வைத்தெல்லாம் எந்த ஒரு முடிவையும் எட்டமுடியாது. எல்லா பெண்களும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஒட்டளித்துவிடவில்லை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-ஏப்-202115:34:42 IST Report Abuse
Anand சூசை வயிற்றில் இன்றும் புளிக்கரைச்சலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X