பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடுங்கள்! தமிழக மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (15+ 30)
Share
Advertisement
சென்னை :''கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், தகுதியுள்ள அனைவரும், தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்,'' என, பொதுமக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.'தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு உள்ளது' என்றும், முதல்வர் தன் பேச்சில் தெளிவுபடுத்தி உள்ளார்.கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக, நேற்று
Corona Vaccine, CM Palaniswami, EPS, தடுப்பூசி, முதல்வர், வேண்டுகோள்

சென்னை :''கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், தகுதியுள்ள அனைவரும், தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்,'' என, பொதுமக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு உள்ளது' என்றும், முதல்வர் தன் பேச்சில் தெளிவுபடுத்தி உள்ளார்.கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., - அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:கடந்தாண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது; நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும், இப்போது படிப்படியாக, கொரோனா வைரஸ் பரவல், தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க, நாம் கடுமையாகபணியாற்ற வேண்டும்.இது, ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய தொற்று நோய். இந்நோய் பாதிக்கப்பட்ட பலர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதையெல்லாம், பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து, அரசு அறிவித்த வழிகாட்டுதல் முறைகளை, தவறாமல் கடைப்பிடித்து செயல்படுத்த வேண்டும்.
காய்ச்சல் முகாம்


சென்னையில், 150 முதல், 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அதை, 400 ஆக உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையிலும், பிற மாநகரப் பகுதிகளிலும், அரசால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட, பணியாளர்கள் வழியே, வீடு வீடாக சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் போது, வீட்டில் இருப்போருக்கு, கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செயல்படுத்தினால் தான், கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவது, தவிர்க்கப்பட வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உணவுக்கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதை, தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும், ஒருமித்த கருத்தோடு, அரசு அறிவித்த, வழிகாட்டு நெறிமுறைகளை, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான், கொரோனா வைரஸ் பரவலை, கட்டுக்குள் கொண்டு வர முடியும். இது, ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை; அந்த உணர்வோடு பணியாற்ற வேண்டும்.குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவர் என்பதை பார்க்கிறோம்.வேட்பாளர் பலி


சமீபத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, ஸ்ரீவில்லிபுத்துார் காங்., வேட்பாளர், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துஉள்ளார். எனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை, மக்கள் தவறாமல் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக, இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தகுதியுள்ள பொதுமக்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள, மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல, தொழிற்சாலைகள், உணவுக்கூடங்கள், மார்க்கெட் போன்ற பகுதியில் உள்ள, நிறுவனங்களின் முதலாளிகள், தங்கள் ஊழியர்களுக்கு, தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தந்த தொழிற்சாலை நிர்வாகம், அரசு மருத்துவமனையை அணுகினால், தொழிற்சாலைகளுக்கே வந்து, தடுப்பூசி செலுத்த அரசு தயாராக உள்ளது.

தமிழகத்தில், போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல், மருத்தவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, இ.பி.எஸ்., பேசினார்.


தேவை இல்லாமல் வெளியே வராதீங்க!


'அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பதை தடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், நேற்று மருத்துவ வல்லுனர் குழுவுடனான, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தொற்று விகிதத்தை குறைக்க பல்வேறு அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட துறையினருக்கு முதல்வர் வழங்கினார். அதன் விபரம்:

* தொற்று கண்டுபிடிப்புக்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனைகள், தினமும், 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவுகளை, 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்

* நோய் தொற்று ஏற்பட்டவருடன், தொடர்பில் இருந்தவர்களில், குறைந்தபட்சம், 25 முதல், 30 பேரை, விரைவாக கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும். நோய் தொற்று இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சை அளித்து, மேலும் பரவாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* தமிழகம் முழுதும், தேவையான அளவு காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை, விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* தமிழகத்தில், 10ம் தேதி வரை, 1,309 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டால், அந்தப்பகுதி, நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

* கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தொற்றின் வீரியத்துக்கு ஏற்றபடி, கொரோனா பாதுகாப்பு மையம் அல்லது பிரத்யேக கொரோனா மருத்துவமனைகளில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்

* அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தேவைக்கு அதிகமாக, படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள், தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்

* கொரோனா தொற்றை தடுக்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதை மீறுவோருக்கு, அபராதம் விதிக்க வேண்டும்

* தகுதி உடைய அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். களப் பணியாற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த இரு வாரங்களுக்குள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

* கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களை குறைக்க, அரசின் நிலையான சிகிச்சை நெறிமுறைகளை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும்

* அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்

* வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்

* திருமணங்களில், 100 பேர்; துக்க நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

* திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் என, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இத்தகைய இடங்களில் பணிபுரிவோர், தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்.இவ்வாறு, முதல்வர் கூறி உள்ளார்.


ஒரே நாளில் 6711 பேர் பாதிப்பு


தமிழக சுகாதாரத்துறை செய்தி குறிப்பு:தமிழகத்தில் 262 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் 82 ஆயிரத்து 982 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில் சென்னையில் 2105; செங்கல்பட்டில் 611; கோவையில் 604; திருவள்ளூரில் 333; காஞ்சிபுரத்தில் 277; மதுரையில் 219 என 6711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 2.06 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் ஒன்பது லட்சத்து 40 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சிகிச்சை முடித்து நேற்று 2339 பேர் உட்பட எட்டு லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது சென்னையில் 17 ஆயிரத்து 98; கோவையில் 4378; செங்கல்பட்டில் 4085 என மாநிலம் முழுதும் 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.கொரோனாவால் நேற்று 19 பேர் உட்பட 12 ஆயிரத்து 927 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c.k.sundar rao - MYSORE,இந்தியா
13-ஏப்-202123:19:05 IST Report Abuse
c.k.sundar rao By taking vaccination , one can have the immunity against virus but this alone is not sufficient, we have to take precautionary measures like washing hands at regular intervals, use mask and maintain safe distance and don't crowd at market place.
Rate this:
Cancel
BabuKK - Tumkur,இந்தியா
13-ஏப்-202117:46:10 IST Report Abuse
BabuKK வாக்சின் ஆஸ்பத்திரி அரசியல் நம்மை திசை திருப்பி எஙகோ பல்லாயிரக்கான தூரத்தில் உள்ள ஆஸ்ட்ரா ஜென்சா மூலக்கூறினால் (பன்னாட்டு நிறுவன கோவிஷீல்டு ) இங்கு தயாரித்ததனால் (கோகோ-கோலா மாதிரி) அதை நம்பி இங்கு சட்ரே தொலைவில் உள்ள மற்றும் சுயமாக ஹைதெராபாத் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்ஸின் மறந்து விட்டீர்களே: நல்ல பலன் தருகிறது எல்லோருக்கும் உகந்தது என்பது முதல் தொண்ணூறு சதவிகிதம். (மூன்றாவது ஆய்வும் வெளிவந்து விட்டது )ஆகையால் மக்களே நீங்கள் கேட்டால் தான் ஆஸ்பத்திரியில் அதை ஸ்டாக் செய்வார்கள் கோவிஷில்டை போட்டுக்கொண்டவர்கள் பரவா இல்லை ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு எந்த விதமான பாதிப்பு வராது. நல்ல ஆரோக்கியமான உணவை உங்கள் உடல் தகுதிக்கு ஏற்ப உட்கொள்ளுங்கள். முடிந்த அளவு மருந்து மாத்திரையை தவிர்த்து உங்களுடைய உடற் பயிற்சி, த்யானம், யோகாசனம், பிராணாயாமம் செய்யுங்கள் தினமும். . உகாதி தின நல்வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
13-ஏப்-202117:39:16 IST Report Abuse
மனிதன் கொரோனா வைரஸ் அதிகரித்திருப்பது இப்பதான் உங்களுக்கு தெரிகிறதா??? இத்தனை நாள் தெருத்தெருவாய் கூட்டத்தை கூட்டி, முழங்கியபோது தெரியவில்லையா??? இப்போது கொரோனா அதிகமாக பரவியிருக்கிறது என்றால், அதற்கு காரணம் நீங்கள் அரசியல்வாதிகள்தான்...அப்போது மக்களைப்பற்றி கவலையில்லை, தங்களை பற்றிய கவலை மட்டும்தான், ஓட்டு கிடைக்கவேண்டும், ஜெயிக்கவேண்டும்... தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மக்களிடம், நீ அங்க போகாத, அங்க உக்காராத அம்பது பெருமட்டும் போ... இந்த ஞானம் நீங்கள் ,டாஸ்மாக்கும், பணமும் கொடுத்து கூட்டம் கூட்டும்போது எங்க போச்சு ???? தடுப்பூசியெல்லாம் போட்டு மக்கள் இந்த வைரஸை ஒழித்து விடுவார்கள்...ஆனால் உங்களைப்போன்ற அரசியல் வைரசுகளிடமிருந்து, தங்களை எப்படிகாத்துக்கொள்வது என்பதுதான், தற்போது மக்களின் கவலை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X