ஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டலில் லத்தியால் தாக்குதல்: அடாவடி எஸ்.ஐ., இடமாற்றம்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (50)
Share
கோவை :கோவையில், இரவு நேரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது, எஸ்.ஐ., லத்தியால் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்; கண்மூடித்தனமாக செயல்பட்ட எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.கோவை, காந்திபுரம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சாஸ்திரி ரோட்டில், மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியளவில், பெண்கள் உட்பட, சிலர்
 ஓட்டல், லத்தி, தாக்குதல், அடாவடி எஸ்.ஐ.,

கோவை :கோவையில், இரவு நேரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது, எஸ்.ஐ., லத்தியால் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்; கண்மூடித்தனமாக செயல்பட்ட எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

கோவை, காந்திபுரம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சாஸ்திரி ரோட்டில், மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியளவில், பெண்கள் உட்பட, சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டூர் போலீசார், அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை சொல்லி, கடைகளை மூடுமாறு, மைக்கில் அறிவித்தபடி வந்தனர்.அப்போது, பாதி 'ஷட்டர்' மூடப்பட்டிருந்த ஓட்டலுக்குள், லத்தியுடன் நுழைந்த எஸ்.ஐ., முத்து, உள்ளே இருந்தவர்களை வெளியேறுமாறு சொல்லி, லத்தியால் சரமாரி தாக்கினார்.
இதில், ஓசூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 40 என்பவருக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. அங்கிருந்த மேலும் மூவர் தாக்கப்பட்டனர்.இது குறித்து, நேற்று காலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் புகார் அளித்தனர். அதில், ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் இணைத்திருந்தனர்.

இதையடுத்து, உதவி கமிஷனர் பிரேமானந்த், குறிப்பிட்ட கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்கள், காயமடைந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார்.இந்நிலையில், எஸ்.ஐ., முத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி, கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, இரண்டு வாரத்துக்குள் விரிவான அறிக்கை கேட்டு, மாநகர போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையமும், 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.


கமல் கண்டனம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின், 'டுவிட்' பதிவில், 'இரவு, 11:00 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை, காந்திபுரத்தில், 10:30 மணிக்கு முன்னதாகவே, போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியுள்ளனர். சாத்தான்குளம் படுகொலைகளை நினைவுபடுத்துகின்றனரா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X