பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பு; கர்நாடகா குறைப்பு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை :உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாத ஒதுக்கீட்டில், காவிரி நீரை வழங்காமல், கர்நாடக அரசு ஏமாற்ற துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. 6.20 டி.எம்.சி.,ஒவ்வொரு
காவிரி நீர் திறப்பு; கர்நாடகா குறைப்பு

சென்னை :உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாத ஒதுக்கீட்டில், காவிரி நீரை வழங்காமல், கர்நாடக அரசு ஏமாற்ற துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. 6.20 டி.எம்.சி.,ஒவ்வொரு ஆண்டும் நீர் வழங்கும் தவணை காலம், ஜூனில் துவங்கும். அதன்படி, ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6.20 டி.எம்.சி., மட்டுமே, தமிழகத்திற்கு கிடைத்தது. ஜூலையில், 31.24 டி.எம்.சி.,க்கு பதிலாக, 11.34 டி.எம்.சி., கிடைத்தது. ஆகஸ்ட் முதல் கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால், இம்மாதத்தில், 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக, 57.4 டி.எம்.சி., நீரை, கர்நாடகா திறந்தது.அதேபோல, செப்., மாதம், 36.7 டி.எம்.சி., பதிலாக, 45.1 டி.எம்.சி.,யும், அக்டோபரில், 20.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 39.7 டி.எம்.சி.,யும், நவம்பரில், 13.7 டி.எம்.சி.,க்கு பதிலாக, 23.1 டி.எம்.சி.,யும், தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

டிசம்பரில், 7.35 டி.எம்.சி., பதிலாக, 12.1 டி.எம்.சி., நீர் கிடைத்தது. ஜன., மாதம், 2.76 டி.எம்.சி.,க்கு பதிலாக, 5.67 டி.எம்.சி., கிடைத்தது. சிக்கல்ஜன., மாதம் வரை நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிகளவு நீரை வழங்கிய கர்நாடகா, தற்போது நீர் திறப்பை குறைக்க துவங்கியுள்ளது. பிப்ரவரியில், 2.50 டி.எம்.சி.,க்கு பதிலாக, 2.03 டி.எம்.சி.,யும், மார்ச்சில், 2.50 டி.எம்.சி.,க்கு பதிலாக, 1.52 டி.எம்.சி., மட்டுமே திறந்துள்ளது. ஏப்ரல் மாதம், 2.50 டி.எம்.சி., திறக்க வேண்டும். ஆனால், குறைந்த அளவிலான நீர், தமிழக எல்லைக்கு வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
13-ஏப்-202121:00:05 IST Report Abuse
Krish கவலைப்படாதீர்கள் . நம் சேனையின் தளபதி முதல்வர் ஆகிறார் . அவர் வந்தவுடன் ' யானை படை , குதிரை படை , மற்றும் படைகளுடன் கர்நாடகாவை போரில் தோற்கடித்து கர்நாடக அணைகளை 'தன வசம் எடுத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை சுலபமாய் தீர்த்துவிடுவார் , அவர் தனத்தை செய்ததுபோல்
Rate this:
Cancel
13-ஏப்-202112:30:50 IST Report Abuse
ஆப்பு ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க... போனவருஷம் நாம செஞ்ச புண்ணியம் மழை நல்லா பெய்ஞ்சு காவேரித் தண்ணீர் பிரச்சனை இல்லாம போச்சு. இந்த வருஷம் என்ன ஆகுமோ? அதுசரி, கோதாவரி தண்ணி எங்கே வந்துக் கிட்டிருக்கு? மதுரை வந்திருச்சா?
Rate this:
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
13-ஏப்-202109:14:00 IST Report Abuse
c.k.sundar rao Release of water from August to Jan 21 , was in excess of required quantum to be released , so Karnataka have released water as per schedule .
Rate this:
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா
13-ஏப்-202109:37:35 IST Report Abuse
Svs Yaadum ooreஅப்படியா ..... எதுக்கு அவ்வளவு கஷ்டம் .....5 வருஷத்துக்கு சேர்த்து மழை பெய்யும்போது 3 மாதத்தில் திறந்து விடுங்க ....அப்பறம் 5 வருஷத்துக்கு தண்ணியே திறக்க வேண்டியதில்லை .....இந்த உச்ச நீதிமன்றதிற்கும் சரியான தெளிவு இல்லை ....மாச மாசம் இவ்வளவு தண்ணீர் என்று எந்த தெளிவுமில்லாமல் உத்தரவு போட்டுக்கிட்டு ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X