சீன தடுப்பூசி மோசம் உயரதிகாரி ஒப்புதல்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவில் தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளதாக, அந்த நாட்டின் மருத்துவ துறை உயரதிகாரி ஒப்புக் கொண்டுள்ளார்.கொரோனாவுக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சீனாவிலும், சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மாதம், 2ம் தேதி நிலவரப்படி, 3.40 கோடி பேருக்கு,


பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவில் தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளதாக, அந்த நாட்டின் மருத்துவ துறை உயரதிகாரி ஒப்புக் கொண்டுள்ளார்.latest tamil newsகொரோனாவுக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சீனாவிலும், சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மாதம், 2ம் தேதி நிலவரப்படி, 3.40 கோடி பேருக்கு, இரண்டு, 'டோஸ்' தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, 6.50 கோடி பேருக்கு, ஒரு, 'டோஸ்' வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி தரவில்லை. தற்போதைக்கு, 'சைனோவேக்' என்ற தனியார் நிறுவனம் மற்றும் 'சைனோபார்ம்' என்ற அரசு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.


latest tamil news
மெக்சிகோ, துருக்கி, இந்தோனேஷியா, ஹங்கேரி, பிரேசில், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.சீன தடுப்பூசியின் செயல்திறன், 50.4 சதவீதமாக உள்ளதாக, பிரேசில் கூறியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, சீனாவின் நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குனர், காவே பூ, 'நம்முடைய தடுப்பூசிகள்அதிக பாதுகாப்பை அளிப்பதாக இல்லை. பரிசோதனை முறைகளை மாற்றி, சிறந்த பயன் அளிக்கக் கூடிய தடுப்பூசியை உருவாக்க வேண்டும்' என, அவர் கூறினார்.இது சீன ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-202102:00:30 IST Report Abuse
Indian Its not about less effect, again its their marketing strategy to gain profit and still have the impact of covid across all country. They might have a vaccine which has strong effect but they keep it for their people. Note that China is the first to discover and could have faced more and invented vaccine earlier than it started spreading. Cheat and communist country never trust those PIGS
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
13-ஏப்-202114:20:01 IST Report Abuse
R S BALA சீனாக்காரன் இன்னொரு வைரசை ரெடி பண்ணுவான், ஆனா தடுப்பூசிக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டன் ...
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
13-ஏப்-202114:16:08 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ நேற்றைக்கு மகன் இன்று அம்மா....என்ன சீனாவிடமிருந்து போட்ட ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக நடக்கச்சொல்லி அழுத்தம் அதிகம் கொடுக்கப்படுகின்றதோ? சீன தடுப்பூசிகளை உலகம் நிராகரிக்கிறது, இந்தியா தடுப்பூசி ஏற்றுமதி, ஏழை நாடுகளுக்கு இலவச வினியோகம், தன் சொந்த மக்களுக்கான பயன்பாட்டுக்காக பட்டி தொட்டி எங்கும் தட்டுப்பாடின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஊசி போடச்சென்ற யாருக்கும் தடுப்பூசி நம் ஊரில் ஒரு இடத்தில் கூட இல்லை என்று இந்தியாவில் எந்த ஒரு சிறு கிராமத்தில் கூட சொல்லவில்லை, அப்படி எந்த ஆதாரமும் இல்லை, இருந்தால் உடனடியாக சரியும் செய்யப்படும், ஆனால் இந்த சீன கைக்கூலிகள் தன் பழைய ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக இந்திய ஏற்றுமதியை தடுத்தால்தான் வேறுவழியின்றி சீனனின் தடுப்பூசியை உலகம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படவேண்டும் என்று சீனாவுக்கு வாலாட்டுகிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X