பொது செய்தி

இந்தியா

படை எடுத்த பஞ்சாப் சிங்கங்கள்: ராஜஸ்தான் கோட்டை தகர்ந்தது

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 12, 2021
Share
Advertisement
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை துணிச்சல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனின் போராட்டம் வீணானது.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் லோகேஷ் ராகுலின் பஞ்சாப் அணி, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை துணிச்சல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனின் போராட்டம் வீணானது.



latest tamil news



இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் லோகேஷ் ராகுலின் பஞ்சாப் அணி, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். தமிழகத்தின் ஷாருக்கான், ஐ.பி.எல்., அரங்கில் அறிமுகம் ஆனார்.


ராகுல் அரைசதம்



பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மயங்க் அகர்வால் (14), சகாரியா 'வேகத்தில்' வீழ்ந்தார். 'அபாய' கெய்ல் 28 பந்தில் 40 ரன் எடுத்து அவுட்டானார். ராகுல், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தனர். டிவாட்டியா பந்தில் சிக்சர் அடித்த ராகுல், 30 பந்தில் அரைசதம் அடித்தார்.

துபே ஒவரில் 2 சிக்சர் அடித்த ஹூடா, ஸ்ரேயாஸ் கோபாலின் 3வது ஓவரில் மூன்று சிக்சர் உட்பட 20 ரன்கள் எடுத்தார். இவர் 20 வது பந்தில் அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது ஹூடா (64) அவுட்டானார். நிகோலஸ் பூரன் (0) கைவிட்டார். ராகுல், 91 ரன்னுக்கு வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஷாருக்கான் (6) அவுட்டாகாமல் இருந்தார்.


சாம்சன் அபாரம்



அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஸ்டோக்ஸ் (0), மனன் வோரா (12) அதிர்ச்சி கொடுத்தனர். பட்லர் 25, ஷிவம் துபே 23 ரன்கள் எடுக்க, ரியான் பராக் 25 ரன்னுக்கு கிளம்பினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மனம் தளராமல் போராடினார் சஞ்சு சாம்சன். 12 ரன்னில் ராகுல் தயவில் தப்பிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 3 வது சதம் அடித்தார்.அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன. 4வது பந்தில் சாம்சன் சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் சாம்சன் (119) அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மோரிஸ் (2) அவுட்டாகாமல் இருந்தார்.


latest tamil news




முதல் சதம்



ஐ.பி.எல்., அரங்கில் நேற்று தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன். தவிர ஐ.பி.எல்., தொடரில் கேப்டனாக அறிமுகம் ஆன போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் ஆனார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X