தேஷ்முக் ஆஜராக சி.பி.ஐ., 'சம்மன்'

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி, மஹாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், மாதம், 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தரும்படி கூறியதாக, உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., மூத்த
தேஷ்முக் , சி.பி.ஐ., சம்மன்

புதுடில்லி :ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி, மஹாராஷ்டிரா முன்னாள்

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், மாதம், 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தரும்படி கூறியதாக, உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., மூத்த தலைவர் அனில் தேஷ்முக் மீது, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த, பரம்வீர் சிங் குற்றஞ்சாட்டினார்.


latest tamil news




இந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள், சஞ்சய் பலாண்டே, குந்தன் ஆகியோரிடம், நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி, அனில் தேஷ்முக்குக்கு, சி.பி.ஐ., நேற்று சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஏப்-202106:30:33 IST Report Abuse
தல புராணம் குட்கா பாஸ்கர், ஈப்பீஸ், ஓப்பீஸ், வேலுமணி, தங்கமணின்னு அம்புட்டு பேர் மேலேயும் வழக்கு பதிவாகி இதே சீப்பீஐ கிட்டே வழக்குகள் 4-5 வருசமா கிடப்பிலே கிடக்கு. அதை விசாரிக்க சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் சீப்பீயை வலியுறுத்தி ஆணை போட்டும் ஒரு வருசத்துக்கு மேலே ஆயிடிச்சி. ஒரு ஆணி கூட பெயரல்லை. பிரதமர் டாடி களவாணிங்களை காப்பாத்தி காபந்து பண்றார். அதே நேரம் அங்கே, நேத்து வழக்கு, இன்னிக்கி விசாரணைக்கு சம்மன்.. என்னாமா கடமையை ஆத்துறாங்க. இங்கிட்டும் கொஞ்சம் ஆத்துங்க பெரதமரே. அதான் ஆடீம்கா ஆட்சி தான் இல்லைன்னு ஆயிடிச்சே. திருவல்லுவார் வேசத்தை கலைக்க வேண்டியது தானே 🥸
Rate this:
sankar - Nellai,இந்தியா
13-ஏப்-202109:24:39 IST Report Abuse
sankarஅப்படின்னா கட்டுமரம் நிலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X