நீதிபதிகளின் ஓய்வு வயது மனு ; சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜ., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது, 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது, 62 ஆகவும்

புதுடில்லி : உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜ., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.



latest tamil news



அதில் கூறப்பட்டு உள்ளதாவது:உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது, 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது, 62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடின்றி, இரு நீதிமன்றங்களிலும், நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை, 65 ஆக நிர்ணயிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதனால், உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்ற எதிர்பார்ப்பின்றி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்னும் சுதந்திரமாக தங்கள் பணியை திறம்பட செய்வர். மேலும், வழக்குகளை விரைவாக முடிக்கவும் முடியும். ஒரே சீரான ஓய்வு வயது நிர்ணயித்தால், உயர் நீதிமன்றத்தில், அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் பணியாற்றும் நிலை ஏற்படும்.


latest tamil news


இது, மிக முக்கியமான அல்லது அரசியல் சாசன சட்டப் புலமை தேவைப்படும் வழக்குகளை கையாள உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து, மத்திய சட்ட அமைச்சகத்திடம் இது குறித்து விண்ணப்பிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக,மனுதாரரின் வழக்கறிஞர், அஸ்வனி குமார் துபே தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஏப்-202108:47:27 IST Report Abuse
Lion Drsekar நாளுக்கு நாள் சிறைச்சாலைகள் மிக அதிக அளவில் திறக்கவேண்டிய ஒரு நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறதே ? இஸ்லாமிய சட்டத்தால் தவறு செய்தவர்கள் திருந்துவார்களா ? இல்லையென்றால் நீதிமன்றமும் பெருகிக்கொண்டே போகும், ......வயதும் வாசகர்கள் விருப்பப்படி ஏறிக்கொண்டே போகும் .... மக்களும் என்றும்போல் எல்லாவற்றையும் இழந்து கயவர்களுக்கு பயந்து வாழ்ந்துகொண்டு இருக்கவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
13-ஏப்-202108:00:06 IST Report Abuse
R.RAMACHANDRAN வயதான நினைவு தப்பியவர்களையெல்லாம் நீதிபதிகளாக நியமிப்பதால்தான் மனம் போன போக்கில் லஞ்சத்தின் பேரில் வழக்குகளைத் தீர்ப்பளிக்கின்றனர்.அவர்கள் மீது இந்த நாட்டில் நடவடிக்கை ஏதும் எடுப்பது இல்லை.நடவடிக்கை எடுத்தாலும் வழக்கு முடிவதற்குள் இறந்துவிடுவோம் என துணிந்து அரசமைப்பு மற்றும் சட்டங்களுக்கு விரோதமான தீர்ப்புகள் வழங்குகின்றனர்.வசதி படைத்தவர்கள் மற்றும் குற்றவாளிகள் பல மேல் முறையீடுகளை செய்கின்றனர்.இவற்ரால்தான் வழக்குகள் மலை போல குவிகின்றன.இதனால் நீதிபதிகளும் வழக்கறிஞ்சர்களும் ஆதாயம் அடைகின்றனர்.வசதியில்லாதவர்கள் நம் தலை எழுத்து அவ்வளவுதான் என்ன முடங்கிப் போகின்றனர்.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
13-ஏப்-202111:50:56 IST Report Abuse
Dr. Suriya"வயதான நினைவு தப்பியவர்களையெல்லாம் நீதிபதிகளாக நியமிப்பதால்தான்" ... அப்போ.... அந்த அம்மா... பேரென்ன புஷ்பா வயதான நினைவு தப்பியவரா? சேச் சேச்சே அப்படியெல்லாம் இருக்காதுங்க .......
Rate this:
Cancel
balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா
13-ஏப்-202107:41:34 IST Report Abuse
balasubramanian ramanathan எந்த வயது வரை வேணும்னாலும் இருங்க ஆனால் தயவு செய்து யாராவது ஒரு நீதியரசர் இந்தியாவில் செக்யூரிலஸம் , பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரம் இந்த வார்த்தைகளுக்கு சட்டபடி என்ன பொருள். எபந்தவகையில் அதை மீறக் கூடாது என கூறினால் மக்கள் பயனடைவார்கள்‌.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X