தேர்தல் முடிவை அறியாமல் இறந்த வேட்பாளர்கள்

Added : ஏப் 13, 2021
Share
Advertisement
திருச்சி:முன்னாள் பிரதமர் ராஜிவ் உட்பட மூவர், ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தங்களது தேர்தல் முடிவை அறியாமல் உயிரிழந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ், 63, போட்டியிட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் கூட பங்கேற்காமல், மதுரை தனியார்

திருச்சி:முன்னாள் பிரதமர் ராஜிவ் உட்பட மூவர், ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தங்களது தேர்தல் முடிவை அறியாமல் உயிரிழந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ், 63, போட்டியிட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் கூட பங்கேற்காமல், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், நேற்று முன்தினம், மாதவராவ் உயிரிழந்தார். தனக்கான தேர்தல் முடிவை தெரிந்து கொள்ளாமலே, மாதவராவ் உயிரிழந்தது, காங்கிரஸ் வட்டாரங்களில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபோல, 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜிவ், உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார்.தன் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தலுக்காக தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தவர், விடுதலைப் புலிகள் தற்கொலைப் படை தாக்குதலில், கொல்லப்பட்டார்.அமேதி தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், ராஜிவ் ஜெயித்தார்.இதேபோல், 2016ம் ஆண்டு அ.தி.மு.க., சார்பில், மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவேலு, தன் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையில் அவர் வெற்றி பெற்றாலும், அதை அறியாமலே, சில நாட்களில் இறந்து விட்டார்.பதவியேற்காதவர்கள்கடந்த, 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற மரியம் பிச்சை அமைச்சராக பதவியேற்றார். அதேநேரம், சட்டசபையில் அவர் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க செல்லும் வழியில், விபத்தில் உயிரிழந்தார்.மேலும், 2006ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற பி.டி.ஆர்., பழனிவேல் ராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றார்.ஆயினும், அவர் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கும் முன், ரயிலில் மதுரை திரும்பும் வழியில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X