ஆளாளுக்கு கொடுத்தாங்க... எதை பிடிச்சாங்க?

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021
Advertisement
வெயில் தணிந்த ஒரு மாலை வேளை. சித்ராவின் வீட்டுக்கு சென்றாள் மித்ரா. ''வா, மித்து. உட்காரு. எப்படியோ ஒரு வழியா எலக்ஷன் முடிஞ்சிடுச்சு. பணம்... பணம்ன்னு எங்கே பாரு, இதே பேச்சு தான்,'' என்ற சித்ரா, ரோஸ் மில்க் கலக்கி கொடுத்தாள்.அதனை பருகியபடி, ''உண்மைதாங்க்கா. இந்த முறை பறக்கும் படைல இருக்கறவங்க ஆங்காங்கே பணம் பறிமுதல் பண்ணாலும், பெருமளவு பணத்துக்கு கணக்கு
 ஆளாளுக்கு கொடுத்தாங்க... எதை பிடிச்சாங்க?

வெயில் தணிந்த ஒரு மாலை வேளை. சித்ராவின் வீட்டுக்கு சென்றாள் மித்ரா.

''வா, மித்து. உட்காரு. எப்படியோ ஒரு வழியா எலக்ஷன் முடிஞ்சிடுச்சு. பணம்... பணம்ன்னு எங்கே பாரு, இதே பேச்சு தான்,'' என்ற சித்ரா, ரோஸ் மில்க் கலக்கி கொடுத்தாள்.

அதனை பருகியபடி, ''உண்மைதாங்க்கா. இந்த முறை பறக்கும் படைல இருக்கறவங்க ஆங்காங்கே பணம் பறிமுதல் பண்ணாலும், பெருமளவு பணத்துக்கு கணக்கு இருந்துச்சாம். ஆனா, வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு போனதையோ, அவங்களுக்கு குடுத்த ததையோ ஒருத்தரும் கண்டுபிடிக்க முடியலை,'' என்றாள்.

''இந்த தடவை ரொம்ப விவரமா பணத்தை பதுக்கி, பட்டுவாடா பண்ணிட்டாங்க. உதாரணமாக, லிங்கேஸ்வரர் ஊர்ல, ஆளுங்கட்சி தரப்புல, ஒரு பூத்துக்கு, 20 பேர் கொண்ட கமிட்டிய நியமிச்சாங்க. அவங்க மூலமா, பொங்கல் பரிசுன்னு ஒவ்வொரு வீட்டுக்கும் பரிசு பொருள் குடுத்தாங்க. அதே டீமை வச்சு, கச்சிதமா பணப்பட்டுவாடா பண்ணிட்டாங்க,''

''ஆமாங்க்கா... நானும் கேள்விப்பட்டேன். மொதல்ல ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுக்கிறதா 'பிளான்' போட்டாங்க. ஆனா, எதிரில் வலுவான ஆள் இல்லைன்னு, 500 ரூபா கொடுத்தா போதும்னு 'மேலிடம்' சொல்லிடுச்சாம். சூரியகட்சி சார்பில், 200 ரூபா குடுத்தாங்களாம். அதுவும் பாதிப்பேருக்கு போய் சேரலையாம்...''

''அவங்க எப்பவுமே அப்டித்தானே. திருப்பூர் வடக்கு தொகுதில, 'குக்கர்' கூட்டணியில, 'செல்வ'மான முரசு சின்னத்துக்காரரு போட்டி போட்டாரு. அவருக்கு, கூட்டணி கட்சியோட முக்கிய நிர்வாகிங்க ஒத்துழைப்பு தரலையாம். வேட்பு மனு தாக்கலுக்கு கூட, முரசு கட்சியின் முக்கிய நிர்வாகி போகலையாம்,''
''விஷயம் என்னன்னு கேட்டீன்னா, முரசுக்கட்சி 'முத்தான' பொறுப்பாளர், இலை கட்சியில் ஐக்கியமாயிட்டாரு,'' என்ற சித்ரா, ''ஓட்டுப்பதிவு அன்னைக்கு, நொய்யல் வீதி பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில, சூரியக்கட்சிக்கு எதிர்பார்த்தளவு ஓட்டு கிடைக்கலைன்னு, பூத் ஏஜன்ட்களுக்கு தெரிஞ்சிருச்சு...''

''இந்த மேட்டர் வேட்பாளர் காதுக்கு போகவும், அவரும் அந்த பூத்துக்கு போய், 'பதட்டத்துடன்' ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வந்தாராம்,'' என, அடுத்த விஷயத்தையும் சொன்னாள்.

''ஏற்கனவே, அவருக்கு பிரஸ்ஸர் ஜாஸ்தி. இதுல இது வேறயா,'' என்ற மித்ரா, ''எலக் ஷன்னாலே, கலெக் ஷன் தான்ங்கற நிலைமை வந்துடுச்சு,'' என்ற மித்ரா, ''கோழிப்பண்ணை ஊர்ல, அறிவு' ஒளி வீசும் நகரில், சில பேரு கூட்டமா சேர்ந்து, குடிநீர் பிரச்னைய முன்வைச்சு, ஓட்டு போடமாட்டோம்னு சொல்லி, கருப்பு கொடியெல்லாம் கட்டியிருக்காங்க,''

''கடைசியா, 'வாங்கிட்டு' 'கப்சிப்'னு ஆயிட்டாங்களாம். கட்சிக்காரங்களும், இதுக்குத்தான், அவங்க இப்டி 'டிராமா' போட்டாங்க போல, என கட்சிக்காரங் சொல்றாங்க,'' விளக்கினாள் மித்ரா.

''மித்து, அதே ஊர்ல, வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆளுங்கட்சி தரப்புல இருந்து, லட்சக்கணக்கான ரூபாயை, இலை, தாமரை கட்சி நிர்வாகிங்ககிட்ட ஒப்படைச்சிருக்காங்க. வந்த பணத்துல பாதிக்கும் குறைவா, வாக்காளர்களுக்கு கொடுத்துட்டு, மீதிய 'பாக்கெட்டில்' போட்டுட்டாங்களாம். இதே மாதிரி தான் சூரிய கட்சியிலேயும் நடந்திருக்கு,'' என்றாள் சித்ரா.

''உண்மைல பாத்திங்கன்னா, அந்த மாதிரி கட்சி நிர்வாகிகளுக்கு தான் தேர்தல் வந்தா திருவிழா. அவங்க காட்டுல தான் பண மழை. இப்படி சேமிச்ச பணத்துல அடுக்குமாடி வீடு கட்டினவங்க கூட இருக்காங்க மித்து'' சொன்ன சித்ரா, ''அந்த டிவிய ஆன் பண்ணு,'' என்றாள்.

அதில், ஆசிரியர்கள் குறித்த செய்தி ஒளிபரப்பானது.

அதைப்பார்த்த சித்ரா, ''எலக்ஷன் வேல பாத்த டீச்சர்ஸ், டிபார்ட்மென்ட் பெரிய ஆபீசர் மேல, கடுப்புல இருக்காங்களாம்'' என்றாள்.

''ஏங்க்கா என்ன ஆச்சு,''

''பின்னே என்னடி, ஓட்டுச்சாவடில எலக்ஷன் வேல பாக்க, ரெண்டு நாளைக்கு முன்னாடியே வீட்ல இருந்த வந்து, ரெண்டு நாள் கண் முழிச்சு, ரெஸ்ட் இல்லாம வேல பாத்து இருக்காங்க. பல பேரு, எலக்ஷன் முடிஞ்ச மறுநாள் விடிய காலைல தான் வீடு வந்து சேர்ந்திருக்காங்க,''

''அப்படியிருந்தும், மறுநாளே, ஸ்கூலுக்கு வரணும்ன்னு ஆபீசர் சொல்லிட்டாராம். அந்தன்னைக்கு லீவா, இல்லையான்னு கூட தெளிவுபடுத்தாம, இப்படி அலைய விடறாங்களேன்னு, புலம்பி தள்ளிட்டாங்களாம்,''

''அதுமட்டுமில்லாம, அங்கான்வாடி, சத்துணவு மையங்களில் சமையல் வேலை செய்யறவங்களுக்கு, ஓட்டுச்சாவடில ஆவணங்களை சரிபார்க்கிற முக்கியமான வேலைய கொடுத்திருக்காங்க. போன தடவை, முதல் நிலை அலுவலரா வேல பாத்த பலருக்கு, இந்த முறை, 2, 3ம் நிலை அலுவலர் வேலைய குடுத்திட்டாங்க,''

''இந்த மாதிரி ஏகப்பட்ட குழப்பம் நடந்திருக்காம். அடுத்து வர்ற உள்ளாட்சி எலக்ஷன்லயாவது, இந்த மாதிரி குழப்பம் வர்றாம அதிகாரிங்க பாத்துக்கணும்,'' என்றாள் சித்ரா.

''அனேகமா பஞ்சாயத்து செக்கரட்டிரிகளுக்கு டிரான்ஸ்பர் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கும் போல'' என புதிர் போட்டாள் மித்ரா.

''எப்படி சொல்றே?'' வியப்பு மேலிட கேட்டாள் சித்ரா.

''கிராம பஞ்சாயத்துகளில் ஊழல் அதிகரிக்க, அவங்க தான் முக்கிய காரணமாக இருக்காங்களாம். ஏற்கனவே, பணம் சம்பாதிக்கணும்ங்கற ஆசையோட தலைவர் நாற்காலியில் உட்காரவங்களுக்கு, பணம் பண்ற எல்லா வாழியையும் செக்கரட்டிரிங்க சொல்லி கொடுத்துடறாங்க,''

''இது, பெரிய ஆபீசர்களுக்கு தலைவலியா மாறிடுச்சாம். எங்க பாரு, இதப்பத்தியே தொடர்ச்சியா பல கம்ப்ளைன்ட் வந்துட்டு இருக்காம். சிட்டி பக்கத்துல இருக்கற செக்கரட்டிரிங்க, கோடீஸ்வரர்களாகவே மாறிட்டாங்களாம். அதனால, ரொம்ப வருஷமா ஒரே பஞ்சாயத்துல 'டேரா' போட்டிருக்கவங்கள டிரான்ஸ்பர் பண்ணா என்னென்னு, மாவட்ட அதிகாரி யோசனை பண்ணிட்டு இருக்கிறாராம்,''

''அடப்போடி. வெவரம் புரியமா பேசற. செக்கரட்டிரிங்க முதல்ல படியளக்கிறதே பெரிய ஆபீசர்களுக்கு தான். அப்புறம் எங்கடி டிரான்ஸ்பர் பண்ண போறாங்க'' என சிரித்தாள் சித்ரா.

அப்போது, டிவியில், முக கவசம் அணியாமல் சென்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்யும் காட்சி ஒளிபரப்பானது.

அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, மங்கலம் ரோட்டில் உள்ள போலீஸ் 'செக்போஸ்ட்'டில், 'மாஸ்க்' போடாமல் வந்த வாகன ஓட்டிக்கு போலீசார் 'பைன்' வசூலித்தனர். இதை கேள்விப்பட்ட, வாகன ஓட்டியின் உறவினர் போலீசிடம் தகராறு செஞ்சது குறித்து, போலீசாரே புகார் மனு அளித்தனர்,''

''எப்.ஐ.ஆர்., பதிவு செய்தும்கூட, சம்பந்தப்பட்ட நபரை இன்னும் அரெஸ்ட் பண்ணலையாம். அந்நபருக்கு ஆதரவா, சில அதிகாரிகளே, 'பெயில்' கிடைக்க ஏற்பாடு செய்றாங்களாம்,'' என்றாள்.

''போலீசே இப்படி செஞ்சா, மக்களுக்கு எப்படி அவங்க மேல நம்பிக்கை வரும்?'' என்ற சித்ரா, ''கமிஷனர் உத்தரவை போலீஸ்காரங்க மதிக்கறதே இல்லையாம்...''

''போன வாரம், 'திருமுருகன்' குடி கொண்டிருக்கிற ஊர் ஸ்டேஷனில், தாறுமாறாக சென்ற சொகுசு கார், ஏழு டூவீலர் மேல மோதியதில், ஒருத்தார் இறந்துட்டார். போதையில் கார் ஓட்டிய நபர், பெரிய இடம் என்பதால், அரெஸ்ட் பண்ண அதிகாரி ரொம்பவே யோசிச்சாராம்,''

''விஷயம் கமிஷனர் காதுக்கு போனதும், 'உடனே ரிமாண்ட்' செய்யுங்கனு' சொல்லியும், சாவகாசமா, அரெஸ்ட் பண்ணி, கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயி, 'பெயிலும்' வாங்கி குடுத்து, தங்களின் விசுவாசத்தை காட்டினாங்களாம்,''இவ்வாறு மித்ரா சொன்னதும், ''சில போலீஸ்காரங்க இப்படி செய்றதாலதான், நேர்மையா இருக்கிற மத்தவங்களுக்கும் கெட்ட பேர் வருது,'' பதிவு துறையில் பண மழையில் நனையும் அதிகாரியின் தனி ராஜாங்கம்,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.

அப்போது, மித்ராவின் போன் ஒலிக்கவே, ''கந்தசாமி அங்கிள். டாடி போன் ரிப்பேர். அவரு, ரிஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கார். நா வெளியே வந்திருக்கேன். வீட்டுக்கு போய் கூப்பிடறேன்,'' என அணைத்தாள்.

''மித்து, ரிஜிஸ்டர் ஆபீஸ்னு நீ சொன்னதும், ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட ஆபீசில், 'இரண்டாம் இணைப்பு' அதிகாரி, 'மாமூல்' வாங்காம, எந்த வேலையும் செய்றது கிடையாது,''

''அதிலும், எந்த வில்லங்கமான இடமா இருந்தாக்கூட, 'வாங்கிட்டு' பதிவு செய்றாராம். இப்படி பணம் மழையில் அந்த அதிகாரி, தன்னை ஒரு 'பாஸ்' போல காட்டிட்டு, எல்லா ஸ்டாப்பையும், 'அவனே... இவனே'ன்னு, ஒருமையில் பேசி ஏசறாராம்,''

''இதனால, அவரை பத்தி, தோழர்கள், பதிவுத்துறை தலைவர், மண்டல ஆபீசுக்கு புகார் அனுப்பிட்டாங்களாம். போராட்டம் நடத்தவும் முடிவு செஞ்சிருக்காங்களாம்,''

''என்ன தான், நடவடிக்கை எடுத்தாலும், பதிவுத்துறையை மட்டும் திருத்த முடியாது போல...'' என்ற மித்ரா, ''அக்கா... இதே பேர் கொண்ட போலீஸ் அதிகாரி ஒருத்தர், 'லிங்கேஸ்வரர்' கோட்டத்தில, பணத்தை வாரி குவிக்கிறாராம்,'' என்றாள்.''அது என்னடி மேட்டர்,''

''சமீபத்தில், 'குன்ன'மான ஊரில், ஒரு கேஸ் விஷயத்தில், இரு தரப்பினரையும் கூப்பிட்டு, கட்டப்பஞ்சாயத்து பண்ணி, பல லகரங்களை லவட்டிட்டார். இதுபோக, சப்-டிவிஷனுக்குள், புற்றீசல் போல திறக்கப்படும், 'தாபா' ஓட்டல்களிலும், 'கட் அண்ட் ரைட்டா' மாமூல் வாங்கிட்டாராம்,''

''அமைதியா இருந்துகிட்டே, அனாயசமா, அள்ளி குவிக்கிற அவரை பத்தி, உயரதிகாரிகளுக்கு பெட்டிஷன் போயிடுச்சாம்,''

''என்னமோ போங்க்கா. கோடையில மழை வருமான்னு, நாம பாக்கறோம். இவங்களோ, 'பண' மழையில தினமும் நனையறாங்க...'' சிரித்த மித்ரா, ''ஓ.கே., அக்கா, டைம் ஆயிடுச்சு, கெளம்பறேன்,'' என்றவாறு, முக கவசத்தை சரி செய்தவாறு, ஹெல்மெட் அணிந்து, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X