'நேஷனல் ஹெரால்டு' வழக்கு சோனியாவுக்கு அவகாசம்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி :'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மனு மீது, சோனியா, ராகுல் உள்ளிட் டோர் பதில் அளிக்க, கால அவகாசத்தை நீட்டித்து, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை நடத்தி வந்த, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, காங்., தலைவர் சோனியா
நேஷனல் ஹெரால்டு,வழக்கு, சோனியா, அவகாசம்

புதுடில்லி :'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மனு மீது, சோனியா, ராகுல் உள்ளிட் டோர் பதில் அளிக்க, கால அவகாசத்தை நீட்டித்து, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை நடத்தி வந்த, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

மொத்தம், 90.25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா, ராகுல் உள்ளிட்ட ஏழு பேர் மீது, பா.ஜ., -- எம்.பி.,யும், கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.


latest tamil news




இது தொடர்பாக, டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரவும், சாட்சியங்களை முன்வைக்கவும் அனுமதிக்கும்படி, அம்மனுவில் கோரினார். இந்த மனுவை, பிப்., 11ம் தேதி, டில்லி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் சுவாமி மேல்முறையீடு செய்தார்.இந்த மனு மீது, சோனியா, ராகுல் உள்ளிட்டோர், ஏப்., 12க்குள் பதில் அளிக்கும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் கெய்ட் முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.



ஒத்திவைப்பு



காங்., தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.சீமா மற்றும் தாரானும் சீமா ஆஜராகினர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, தங்கள் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம், 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Ravindran - Chennai,இந்தியா
13-ஏப்-202119:14:40 IST Report Abuse
P Ravindran மிக கேவலமான குடும்பம். வெட்கக்கேடு. இந்தியாவில் இருந்துகொண்டு இந்த நாட்டை ஏமாற்றும் வெளிநாட்டு கும்பல். செய்த திருட்டு தனத்தை மறைக்க வாய்த்த வாங்குகிறார்கள்.
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
13-ஏப்-202120:10:09 IST Report Abuse
SureshKumar Dakshinamurthyஅதற்கு கோர்ட் துணை போகிறது... வாய்தா ஒரு இருபது முப்பது வருடத்திற்கு கூட கொடுப்பார்கள்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஏப்-202117:27:06 IST Report Abuse
Endrum Indian இது தான் அநீதிபதிகளின் உண்மையான செயல் பெட்டி வாங்கிக்கொண்டு
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
13-ஏப்-202117:11:33 IST Report Abuse
Rajasekaran அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X